கி.பி., 1- மற்றும் 2-ம் நுாற்றாண்டை சேர்ந்த, தமிழ் ‘பிராமி’ எழுத்து பொருட்கள் கண்டுபிடிப்பு!

கி.பி., 1- மற்றும் 2-ம் நுாற்றாண்டை சேர்ந்த, தமிழ் 'பிராமி' எழுத்து பொருட்கள் கண்டுபிடிப்பு!

கி.பி., 1- மற்றும் 2-ம் நுாற்றாண்டை சேர்ந்த, தமிழ் ‘பிராமி’ எழுத்து பொருட்கள் கண்டுபிடிப்பு!

மதுரை மாவட்டம், கவச கோட்டையில் நடந்த ஆய்வில், கி.பி., 1ம் மற்றும் 2ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ‘பிராமி’ எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தேனி மாவட்டம், போடி, சி.பி.ஏ., கல்லுாரி வரலாற்றுத்துறை மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் துறை மூலம், இந்த ஆய்வு நடந்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


உதவி பேராசிரியர், மாணிக்கராஜ் கூறியதாவது: தே.கல்லுப்பட்டி அருகே, கவசகோட்டை கிராமத்தில், பண்ணைமேடு எனப்படும், அக்ரஹாரமேடு பகுதியில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில், ஆய்வு மேற்கொண்டோம். இதில், தமிழரின் தொன்மை எழுத்து வடிவமான, தமிழ், ‘பிராமி’ எழுத்துகள் பொறித்த, கருப்பு, சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, சுடுமண் பொம்மைகள், மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பானை ஓடுகளில், கி.பி., 1- மற்றும் 2ம் நுாற்றாண்டை சேர்ந்த, தமிழ் பிராமி எழுத்து வடிவம் இடம் பெற்றுள்ளது. தொடர் எழுத்துகள் கிடைக்காததால், முழுவதும் படித்து அறிய முடியவில்லை. இங்கு காணப்படும் செங்கல்கள், கீழடி அகழ்வாய்வு கட்டுமானத்தில் இருந்த செங்கல்களின் அமைப்பை போன்றே காணப்படுகிறது. துவாரங்கள் உள்ளது இதன் சிறப்பு. மற்றொரு பானை ஓட்டில், மீன் உருவம் பொறித்துள்ளது. முதுமக்கள் தாழிகளின் மேற்கு பகுதியில் வட்டவடிவமான அலங்காரங்கள் மூன்று மற்றும் நான்கு அடுக்கில் பொறிக்கப்பட்டு உள்ளது. தாழியின் விளிம்பு பகுதியில், கயிறு போன்ற அலங்கார குறியீடுகள் காணப்படுகின்றன. இவை மண்பாண்டங்கள் சுடுவதற்கு முன் வரையப்பட்டவை என, தெரிகிறது.விரிவான தொல்லியல் ஆய்வு மேற்கொண்டால், பண்டைய தமிழர்களின் சிறப்புகளையும், வாழ்வியல் முறை, நாகரிகத்தையும் பண்பாட்டு அடையாளங்களையும் வெளி கொணர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: