கடலூரில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டபிடிப்பு!

கடலூரில் கண்டெடுக்கப்பட்ட தாழி இப்புகைப்படம் இல்லை. படத்தில் உள்ளது மாதிரி மட்டுமே!

கடலூரில் கண்டெடுக்கப்பட்ட தாழி இப்புகைப்படம் இல்லை. படத்தில் உள்ளது மாதிரி மட்டுமே!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே சுமார் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடி அருகே அரசடிக்குப்பம் கிராமத்தில் மழைநீரை வெளியேற்றுவதற்காக நிலத்தை தோண்டியபோது சுமார் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி வெளிப்பட்டுள்ளது. ஆய்வில் அரசடிக்குப்பம் கிராமத்தில் கிமு 5-ம் நூற்றாண்டு முதல் மக்கள் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

இந்த தாழி 120 செ.மீ உயரம் கொண்டது. தாழியின் அருகே, மூட்டுகள் தாழியைச் சுற்றி வட்டவடிவில் வைக்கப்பட்ட லாட்ரைட் கற்கள் காணப்பட்டன.

தாழியின் உள்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு பிடித்தமான உணவுப் பயன்படுத்தப்பட்ட சிறிய வகை கருப்பு, சிவப்பு மட்கலன்களின் உடைந்த பாகங்கள் இருந்தன. பானை ஓட்டின் கழுத்துப் பகுதியில் கீறல் குறியீடு இருந்தது. இந்த குறியீடுகள் படிப்படியாக வளர்ந்து தமிழ் பிராமி எழுத்து வடிவத்தை எட்டியது என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

2,000 ஆண்டுகள் பழமையான இயற்கை நடுகல் ஏலகிரி மலையில... 2,000 ஆண்டுகள் பழமையான இயற்கை நடுகல் ஏலகிரி மலையில், கண்டுபிடிப்பு! ஏலகிரி மலையில் இயற்கையாக அமைந்த நடுகல் ஒன்றை வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய ...
போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுப... போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுபிடிப்பு! போடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் முந்தல் கிராமத்துக்கு அருகே கீழச்சொக்கையா கோவில் உள...
ஏற்காட்டில், 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள... ஏற்காட்டில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு, வரலாற்று ஆய்வு மையக் குழுவினர் தலைமையிலானோர், மாரமங்கலம், அரங்கம...
“தமிழர் தலைநகரில் 2000 வருடங்கள் பழமையான 43 ... "தமிழர் தலைநகரில் 2000 வருடங்கள் பழமையான 43 கல்லறைகள் கண்டுபிடிப்பு"! திருகோணமலை, குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட கும்புறுகஸ்வௌ காட்டுப் பிரதேசத்தி...
Tags: 
%d bloggers like this: