2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மண் பானை கிருஷ்ணகிரி அருகே கண்டுபிடிப்பு!

2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மண் பானை கிருஷ்ணகிரி அருகே கண்டுபிடிப்பு!

2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மண் பானை கிருஷ்ணகிரி அருகே கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லூரி மாணவர்கள், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மண் பானை மற்றும் குவளையை கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து, கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


கிருஷ்ணகிரி மாவட்டம், இட்டிக்கல் அகரம் கிராமத்தில், காட்டூர் துர்க்கம் என்ற மலைக்கு கிழக்கு புறம், கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான கருங்கல் என்ற நிலத்தில், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாண்டவர் குட்டையில், பெருங்கற்காலத்தை சேர்ந்த மூடியுடன் கூடிய மண் பானை, மண் குவளை மற்றும் பெருமனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒவ்வொரு ஐந்து கி.மீ., தொலைவிலும் பெருங்கற்கால நினைவு சின்னங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பான்மையான நினைவு சின்னங்கள், கல் குவாரிகள் வெட்டவும், விவசாயம் செய்யவும், புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது இருப்பவை ஒரு சில மட்டுமே. இங்கு கிடைத்துள்ள மண் குவளை, மண் குடுவை பெருங்கற்காலத்தில், இறந்துபோன மூதாதையர்களை புதைக்கும் இடத்தில், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து, இடு பொருட்களாக வைத்து புதைக்கப்படுகிறது. மண் குடுவையானது, சிவப்பு நிறத்தில் மூடியுடன் மெருகூட்டப்பட்டு, குறியீடுகளுடன் காணப்படுகிறது. இதே போல், மற்றொரு கறுப்பு சிவப்பு வண்ணத்தில், கழுத்தற்ற குவளை குறியீடுகளுடன் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: