2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டுபிடிப்பு!

விருத்தாசலம் அருகே, 2,000 ஆண்டுகள் பழமையான, தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த தர்மநல்லுாரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு, அங்குள்ள பெரியதோப்பு பகுதியில், பழமையான எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்தது.


ஒன்றுபட்ட உலக. த் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இதை, ஆத்துார் அரசு கல்லுாரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை உதவிப் பேராசிரியர் கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்ததில், பானை ஓட்டில் இருந்தது, தமிழ் பிராமி எழுத்துக்கள் என்பது தெரிய வந்தது.

பானையின் கழுத்து பகுதியில், ய ம க ன் ஆகிய நான்கு எழுத்துக்கள் உள்ளன. இதற்கு, கடைச்சன், கடைசி மகன், இளைய மகன் என்று பொருள். இந்த எழுத்துக்கள், மனிதனின் பெயராக இருக்கலாம். எழுத்துக்கள் துவங்குமிடம் உடைந்துள்ள தால், முழு பெயரை அறிய முடியவில்லை. இவ்வெழுத்துக்களின் காலம், கி.மு., முதல் மற்றும் கி.பி., 1ம் நுாற்றாண்டிற்கு இடைப்பட்டதாகும்.

பெரியதோப்பில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில், தானிய சேமிப்பு கலன்கள், சுடுமண் குழாய்கள், சிறுமியர் விளையாடும் சில்லு கருவிகள், மண்பாண்ட மூடிகள், 5 செ.மீ., கனம், 15 செ.மீ., அகலம், 21 செ.மீ., நீளம் கொண்ட செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவைகளின் காலம், கி.பி., 10 – 13ம்நுாற்றாண்டாகும். இவ்வாறு உதவிப் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் கூறினார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

2000 ஆண்டுகளுக்கு முன் இத்தாலி – தமிழக உறவு ... 2000 ஆண்டுகளுக்கு முன் இத்தாலி - தமிழக உறவு ! (இந்திய அரசியலில் திருமதி சோனியா காந்தி குதித்தவுடன் இத்தாலி நாடு பற்றி புதிய ஆர்வம் பிறந்துள்ளது. ஆனா...
தேன்கனி கோட்டையில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டு... தேன்கனி கோட்டையில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகண்டுபிடிப்பு! கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனி கோட்டையில், பழங்கால வரலாற்று சான்றுகளை விவரிக்கும், 13ம் நு...
பாழடைந்து வரும் 1,100 ஆண்டு வரலாறு சமணர் கோவில் அழ... திருப்பூர் அருகே, 1,100 ஆண்டுகள் பழமையான சமணர் கோவில், எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. புராதன சின்னமான இக்கோவிலை புதுப்பித்து பாதுகாக்க...
காலம் கடந்த நிலையிலும், 2000 ஆண்டு பெருமையை பறைசாற... 2000 ஆண்டு பெருமையை பறைசாற்றும் இடைக்கழிநாடு! வளர்ச்சிக்கு ஏற்ப ஊர் பெயர்கள் மருவி வரும் நிலையில், சென்னை - புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை...
Tags: