2,000 ஆண்டுகள் பழமையான இயற்கை நடுகல் ஏலகிரி மலையில், கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகள் பழமையான இயற்கை நடுகல் ஏலகிரி மலையில், கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகள் பழமையான இயற்கை நடுகல் ஏலகிரி மலையில், கண்டுபிடிப்பு!

ஏலகிரி மலையில் இயற்கையாக அமைந்த நடுகல் ஒன்றை வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து, மோகன்காந்தி கூறியதாவது:

ஏலகிரி மலையில் உள்ள, மங்களம் பகுதியில், சுவாமி மலை கோவிலுக்கு செல்லும் காட்டுப் பகுதியில், இயற்கையான பாறையில் நடுகல் செதுக்கப்பட்டுள்ளது.

2,000 ஆண்டுகளுக்கு முன், நாயக்கர் காலத்தை சேர்ந்தது, இந்த நடுகல். இதுவரை, பலகை கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்ட நடுகல் மட்டும் கிடைத்துள்ளன. இயற்கையாக அமைந்த பாறையில் நடுகல் உள்ளது, இது முதல் முறையாகும். மாட்டுச் சந்தையில் பசுக்களை திருடி சென்றவர்களுடன், இறந்த வீரனின் நினைவாக, பெரிய பாறையில் அவர் உருவத்தை செதுக்கியுள்ளனர். இந்த கல்லை, நீராட்டி, மா இலை, செண்டுமல்லியால் அலங்கரித்து, மக்கள் வழிபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

புதிய கற்கால ஆயுத பட்டறை வேலூர் அருகே கண்டுபிடிப்ப... புதிய கற்கால ஆயுத பட்டறை வேலூர் அருகே கண்டுபிடிப்பு! வேலுார், சத்துவாச்சாரி மலை அடிவாரத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கல் ஆயுத பட்டறை, கண்டுபிடிக்...
திருச்சி அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு... திருச்சி அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு! திருச்சி அருகே உத்தமர்சீலியில் 8ம்நூற்றாண்டை சேர்ந்த ஆட்சியாளர்களின் கல்வெட்டு கண்...
திருப்பூர் அருகே சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு... திருப்பூர் அருகே சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு! திருப்பூர் அருகே, பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வரும், சமணர் கோவிலில் புதிய தெ...
போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுப... போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுபிடிப்பு! போடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் முந்தல் கிராமத்துக்கு அருகே கீழச்சொக்கையா கோவில் உள...
Tags: 
%d bloggers like this: