பழனியில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாலை கோயில் கண்டுபிடிப்பு!

பழனியில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாலை கோயில் கண்டுபிடிப்பு!

பழனியில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாலை கோயில் கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கம்பட்டி யில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ஸ்தபதி கார்த்தி, பேராசிரியர் அசோகன் மற்றும் ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், கோமதி, பாஸ்கர் ஆகியோர் கலிங்கப்பட்டியில் உள்ள ஒரு சிதிலமடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு முடிவில் இந்த கட்டடம் ஒரு மாலைக் கோயில் எனக் கண்டறிந்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இது பற்றி பேசிய தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, “கணக்கம்பட்டி தென்புறம் ஒரு சிதிலமடைந்த கட்டடத்தை ஆய்வு செய்தோம். கட்டடத்தின் முன் பகுதியில் புதைந்த நிலையில் ஒரு சிற்பத் தொகுதி இருந்தது. இந்த கட்டடம் மாலை கோயில் வகையைச் சார்ந்தது. மாலைக்கோயில் என்பது நாயக்க மன்னர்கள், குறுநில மன்னர்கள் குறிப்பாக பாளையக்காரர்களின் நினைவாக அவர்கள் இறந்த பிறகு எடுக்கப்படும் சமாதிக் கோயிலாகும். இது கிபி 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஒற்றைக் கருவறை விமானத்துடன் கூடிய இந்தக் கோயில் 22×13×3 அளவுள்ள செங்கற்களால் கட்டப்பட்டது. இந்த கட்டுமானத்திற்கு சுண்ணாம்புக்காரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மண்ணில் புதைந்த நிலையில் இருந்த சிற்பம் கருவறையின் உள்ளே இருந்ததாகும். ஒரு பாளையக்காரர் தனது நான்கு மனைவிகளுடன் வணங்கிய நிலையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இவர்களின் நினைவாகவே இந்த கோயில் எடுக்கப்பட்டுள்ளது. இங்குக் கல்வெட்டுகள் எதுவும் இல்லை. அதனால் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.

கட்டடக் கலை குறித்துப் பேசிய ஸ்தபதி கார்த்தி, ” விமானத்துடன் கூடிய சமாதி கோயில் நான்கு அங்கங்களை உடைய சதுர வர்க்க விமானம் என்ற சிற்ப சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. சமாதி கோயிலில் தற்போது ஸ்தூபி இல்லை. சுண்ணாம்புக் காரையால் செய்யப்பட்ட ஸ்தூபி பிற்காலத்தில் இடிந்து போய் இருக்கலாம். கோயிலின் முன் பகுதியில் சுருள் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற விமான அமைப்பு மாமல்லபுரத்தில் பார்க்க முடியும் என்றார்.

விகடன்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: