செஞ்சி அருகே 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

செஞ்சி அருகே 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

செஞ்சி அருகே 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

செஞ்சி அருகே, 17ம் நுாற்றாண்டை சேர்ந்த கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். செஞ்சிக் கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்ற நிறுவனர் லெனின், தலைவர் ராஜாதேசிங்கம், செயலாளர் முனுசாமி உள்ளிட்ட குழுவினர், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, பாலப்பட்டு கிராமத்தில் கள ஆய்வு செய்தனர். அங்குள்ள பலராமன் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள பாறையில், தமிழ் கல்வெட்டு ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


பத்து வரிகளை கொண்ட இந்த கல்வெட்டில் சில வரிகள் சிதிலமடைந்துள்ளன. இந்த கல்வெட்டில், விவசுவாச வருடம் ஐப்பசி மாதம், விற்பட்டு கிராமத்தை சேர்ந்த கொருக கொண்டம நாயக்கர் என்பவர் நூறு குழி நிலத்தை குடை மானியமாகவும், வேலுாரை சேர்ந்த முத்தி நாயக்க குமரன் பெத்த நாயக்கன் 50 குழி நிலத்தை தலையாரி மானியமாகவும், கொடுத்ததை பதிவு செய்துள்ளனர்.

இந்த மானியத்திற்கு யாரேனும் கெடுதல் செய்தால், கங்கைக் கரையில் காராம்பசுவை கொன்ற பாவத்திலே போகக்கடவார்கள். இந்த தானத்தை சூரியனும், சந்திரனும் உள்ளவரை அனுபவித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள குறுநில மன்னர்கள் கி.பி.,17-ம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த கல்வெட்டு 17-ம் நுாற்றாண்டை சேர்ந்தது என தெரிய வருகிறது. இவ்வாறு ஆய்வாளர் லெனின் தெரிவித்தார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு இடங்களில் பழமையான ... திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு இடங்களில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு! திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு இடங்களில், பழமையான இரு கல்வெட்டுகளை, த...
ஏற்காடு அருகே 13ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த, ந... ஏற்காடு அருகே 13ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த, நான்கு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு! ஏற்காடு வட்டத்துக்குள்பட்ட மாரமங்கலம் ஊராட்சியில் உள்ள கோயிலூர் ...
11ம் நூற்றாண்டு சோழர் கால பாறை கல்வெட்டு கண்டுபிடி... 11ம் நூற்றாண்டு சோழர் கால பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு! தேன்கனிக்கோட்டை அருகே, 11ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர் கால பாறை கல்வெட்டை, அறம் வரலாற்று ஆய்வ...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புலி சின்னத்துடன் சோழர் ... கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புலி சின்னத்துடன் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு! கிருஷ்ணகிரி மாவட்டம், வானமங்கலத்தில், பழமையான ஆஞ்சநேயர் கோவில் திருப்...
Tags: