தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு செம்பு காசு கண்டுபிடிப்பு!

தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு செம்பு காசு கண்டுபிடிப்பு!

தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு செம்பு காசு கண்டுபிடிப்பு!

கி.பி., 15ம் நுாற்றாண்டில், சேலத்தில் வெளியிட்ட நரசிம்மரின் உருவம், தமிழ் எழுத்துகளுடன் கூடிய அரிய செம்புக்காசு கிடைத்துள்ளது.

தர்மபுரி அருகே, கொத்துாரில், கல்வெட்டுகளை ஆய்வு செய்து, வரலாற்று ஆய்வாளர்கள் நடன காசிநாதன், சீதாராமன் முறையே, ‘சேலம், தர்மபுரி வரலாற்று பதிவுகள், தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள்’ நுால்களை எழுதியுள்ளனர். அதில், கி.பி., 1511ல், அப்போதைய ஒன்றிணைந்த சேலம் மாவட்டம், ஓசூரை, மன்னன் ராமண்ண நாயக்கர் ஆண்டு வந்தார். அவரது காலத்தில், ‘காளை’ உருவம், தெலுங்கு எழுத்துகளுடன் நாணயம்; நின்ற நிலையில், ‘அனுமன், நரசிம்மர்’ உருவம் பொறித்து, ‘ரமண’ எனும் தமிழ் எழுத்துகள் உட்பட, ஐந்து வகை நாணயங்களை கையால் அச்சடித்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.44 கிராம் எடை அதன்படி, திருச்சி காவிரி ஆற்றுப்படுகையில், கடந்த மாதம் கிடைத்த செம்புக்காசு, 2.44 கிராம் எடை, முன்புறம் அமர்ந்த நிலையில் யோக நரசிம்மர், பின்புறம், ‘ரமண’ என, இரட்டை வரியில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு கால கட்டங்களில், தமிழ் எழுத்துகளுடன் வெளியிட்டுள்ள காசுகள் கிடைத்தாலும், சேலத்தை ஆண்ட மன்னர்கள் வெளியிட்ட காசுகள், மிக அரிதாகவே கிடைத்து உள்ளன.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு 2 ஆயிரம் ஆண்டுகள்... கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு! கீழடியில் நடந்து வரும் நான்காம் கட்ட அகழாய்வில் சுடுமண் ...
ராமநாதபுரம் அருகே பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்... ராமநாதபுரம் அருகே பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்டுபிடிப்பு! ராமநாதபுரம் அருகே சேதுபதி கால கோட்டைப் பகுதியினுள் பாண்டியர் கால கோட்டை இருப்பது கண்டற...
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே 2 சதிக்கற்கள் கண... நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே 2 சதிக்கற்கள் கண்டுபிடிப்பு! நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலை த...
ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண... ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு! சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கேளையூர் கிராமத்தில், தொல்குடிகளி...
Tags: