சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு!

சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு!

சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வரும், சமணர் கோவிலில் புதிய தெலுங்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. புஞ்சை புளியம்பட்டி- அவிநாசி ரோட்டில், ஆலத்துார் கிராமத்தில், 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர், தெலுங்கு கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.

பண்டைய வட கொங்கு, 20 நாட்டு பிரிவுகளில், வடபரிசார நாட்டில் ஆலத்துார் அமைந்துள்ளது. பண்டைய வணிகர்கள் பயன்படுத்திய கொங்கு பெரு வழியில் அமைந்துள்ளதால், சமணர்கள் இங்கு குடியேறியுள்ளனர். 1,100 ஆண்டுக்கு முன்பு, வீரசங்காதப் பெரும்பள்ளி அணியாதழகியார் என்ற இக்கோவிலை கட்டியுள்ளனர். இன்று அமணீசர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில், 10-ம் நுாற்றாண்டை சேர்ந்த, மூன்று வட்டெழுத்து கல்வெட்டுக்கள், 13-மற்றும் 14-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூன்று தமிழ் கல்வெட்டுக்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, 14-ம் நுாற்றாண்டை சேர்ந்த தெலுங்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. ஏழு வரிகளைக் கொண்ட கல்வெட்டில், கஸ்துரி வெங்கடாசாரி என்பவருக்கு கோவில் திருவிழாவின் போது கொடுக்கப்பட்ட உரிமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பழமையான இக்கோவில், பண்டைய வாழ்வியல், தமிழகத்திற்கும், சமணத்திற்கும், 2,500 ஆண்டுக்கு முந்தைய தொடர்புகள், பண்பாடு சார்ந்த உறவுகள் என வரலாற்றுச் சான்றுகளை கொண்டுள்ளது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட... ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு! திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் க.மோகன்காந்த...
கீழடி நான்காம் கட்ட அகழாய்வில் தங்கம் உள்பட 7000 ப... கீழடி நான்காம் கட்ட அகழாய்வில் தங்கம் உள்பட 7000 பொருட்கள் கண்டுபிடிப்பு - தொல்லியல் துறை அறிக்கை! கீழடியில் நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வில் தங...
இலங்கை மன்னார் மாவட்டத்தில் இதுவரை 175 மனித எலும்... இலங்கை மன்னார் மாவட்டத்தில் இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு! மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் த...
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண... விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு! விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம் ஈயனூர் என்ற கிர...
Tags: 
%d bloggers like this: