அன்னவாசலில் பழிக்குப்பழி நிகழ்வை குறிக்கும் கி.பி.14ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

அன்னவாசலில் பழிக்குப்பழி நிகழ்வை குறிக்கும் கி.பி.14ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

அன்னவாசலில் பழிக்குப்பழி நிகழ்வை குறிக்கும் கி.பி.14ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

14-ம் நூற்றாண்டில் நடந்த பழிக்குப்பழி நிகழ்வை குறிக்கும் கல்வெட்டினை புதுக்கோட்டை வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத் தலைவர் ராஜாமுகமது, செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய தலைவர் ராஜாமுகமது கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சி அழகிய சோழீச்சுரமுடையார் கோயிலில் பராக்கிரம பாண்டிய மன்னன் (கி.பி.13151344) காலத்தை சேர்ந்த பழிக்குப்பழி நிகழ்வை குறிக்கும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வெட்டு பதியப்பட்ட ஆண்டு கி.பி.1326 ஆகும். இந்த கல்வெட்டில் கீழக்குறிச்சி உடப்பக்கோன் மனைவி சொக்கி. இவ்வூர் சிலம்பன் மகள் சுற்றாள்.

இருவரும் தோழியர். ஒரு நாள் இருவருக்கும் பிணக்கமுண்டாகி, சுற்றாள், சொக்கியை வாசகப்பிழையாய் பேசியதால் (திட்டுதுல், ஏசுதல்) அவள் மனமுடைந்து நஞ்சுண்டு தற்கொலை செய்து கொள்ளுகிறாள். வெகுண்டெழுந்த சொக்கியின் உறவினர் மற்றும் அவளது கிளையார்கள் சேர்ந்து பழிக்குப்பழி தீர்க்க எண்ணி சுற்றாளின் தங்கை கடம்பி என்பாளை பிடித்து, கொன்று, எரித்து, சுவடு தெரியாமலாக்கி விடுகின்றனர்.

இது வழக்காகி, கீழக்குறிச்சி ஊர்ச்சபையின் முன் விசாரணைக்கு வருகிறது. கடம்பியின் கொலைக்கு பரிகாரமாக (தண்டனையாக) சொக்கியின் வகையார், கீழக்குறிச்சி அழகிய சோழீஸ்வரர் கோயிலுக்கு நில புலன்கள் கொடையளிக்க வேண்டும் என ஊர்ச் சபையினர் தீர்ப்பு அளிக்கின்றனர். அதன்படி கொடை வழங்கப்பட்ட செய்தி இந்த கல்வெட்டில் பதியப்பட்டு உள்ளது. 700 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழக சமூகம் குறித்து அரிய செய்தியினை இந்த கல்வெட்டு கூறுகிறது. திட்டுதல், ஏசுதல் என்பதற்கு ‘வாசகப் பிழையாய்ப் பேசுதல்’, என அழகியதொரு தமிழ்ச் சொல் கல்வெட்டில் உள்ளது. இதுபோன்ற செய்தியை கூறும் கல்வெட்டு தமிழகத்தில் வேறு எங்கும் கிடைக்கவில்லை என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: