13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் கண்டுபிடிப்பு!

13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் கண்டுபிடிப்பு!

13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் கண்டுபிடிப்பு!

தேன்கனிக்கோட்டை அடுத்த தண்டரையில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகற்களை, அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த தண்டரை கிராமத்தில், அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் தொகுப்பும், சிவன் கோவில் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


“தண்டரை கிராமத்திற்கு அருகே, தனியாருக்கு சொந்தமான நிலத்தில், தொல்லியல் துறை பதிவு செய்யாத, இரு நடுகற்கள் உள்ளன. அதன் அருகே உடைந்து போன ஒரு நந்தி சிற்பமும், சேதமடைந்த பலிபீடமும் இருப்பதை பார்க்கும் போது, இப்பகுதியில் கண்டிப்பாக சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும். முதல் நடுகல்லில், போர் வீரர்கள் சண்டையிடுவது போல் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. நடுவில் நின்று போரிடும் வீரனின் உருவமைப்பும், வாள் பிடித்து நிற்கும் நிலையை பார்க்கும் போது, இவ்வீரன் ஒரு குறுநில மன்னன் போல் தெரிகிறது. இந்த வீரன், வலது கையில் பெரிய அளவிலான வாளை மேல் நோக்கி பிடித்த படியும், இடது கையால் தன்னை நோக்கி வரும் குதிரை வீரனை தடுப்பது போலவும் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. கழுத்து, கைகளில் நிறைய ஆபரணங்கள் உள்ளன. இடையில் பெரிய குத்துவாள் உள்ளது. வீரனின் இடதுபுறத்தில், குதிரை மீது அமர்ந்தபடி வீரன் வேல் கொண்டு தாக்குவது போல சிற்பம் உள்ளது. நடுவில் இருக்கும் வீரனின் கால் பகுதியில், ஒரு வீரன் இறந்து கிடப்பதை போலவும், பின் புறத்திலும் சில வீரர்கள் நிற்பதை போலவும் காட்சிகள் உள்ளன. அதனால் நடுவில் உள்ள வீரன், பல முனையில் இருந்து தாக்கப்பட்டு இறந்திருக்க வேண்டும். அல்லது முதல் வீரனை கொன்று விட்டு, குதிரை வீரனோடு சண்டையிடும் போது இறந்திருக்க வேண்டும். இது சொர்க்க வகை நடுகல்.

இரண்டாவது சொர்க்க வகை நடுகல்லில், நடுவில் உள்ள வீரனின் வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் உள்ளது. வேல் கொண்டு தாக்க வரும் போர் வீரனை, கேடயம் மூலம் தடுப்பது போல் சிற்பம் உள்ளது. நடுகற்கள் கிடைத்துள்ள இடத்தின் அருகே, 17ம் நுாற்றாண்டில் திப்புவின் தந்தை ஐதர் அலி கட்டி கொடுத்த ஏரி உள்ளது. இதனால், இந்த இடத்தில் போர் நடந்திருக்க வாய்ப்புள்ளது”. இவ்வாறு, அறம் வரலாற்று ஆய்வு மைய குழு ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: