ஏற்காட்டில், 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு!

13th Century preiode tombstone ஏற்காட்டில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு, வரலாற்று ஆய்வு மையக் குழுவினர் தலைமையிலானோர், மாரமங்கலம், அரங்கம் கிராமத்தில், கள ஆய்வு மேற்கொண்டனர். கல்லு சிலைக்காடு வனப் பகுதியில், 13-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட, இரண்டு நடுகற்களை கண்டுபிடித்தனர். இவை, சமூகத்தை காக்கும் பொருட்டோ, அரசனுக்காகவோ, பசுக்களை கவரவோ அல்லது மீட்கவோ வேண்டி, போரிடும் போது விழுப்புண்பட்டு மடியும் வீரனின் வீரத்தை போற்றும் வகையில் நடப்படும் வீர நடுகற்கள்.

முதல் நடுகல்லில், வீரனின் இடதுகையில் வில்லேந்தி, வலது கையில் வாள் ஏந்தி, தலைமுடி உச்சிமேல் முடிந்து, இடுப்பில் அரையாடை அணிந்தபடி, போர் புரியும் நிலையிலுள்ளது. இது, போரில் எதிர்த்து நின்று, வீழ்ந்த பட்டான் என்பதை குறிக்க, வீரனின் இடுப்பில் அம்பு முன்னிருந்து பாய்ந்தது போல், புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நடுகல், பலகை கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இது, முதல் நடுகல்லில் உள்ளபடியே காணப்படுகிறது. ஆனால், இடுப்பிலுள்ள வாளை, வலது கையில் பிடித்திருப்பது போன்று உள்ளது. இரு நடுகற்களும் வீரக்கல் வகையைச் சார்ந்தது. அதன் அருகே, புது கற்கால கைக்கோடாரிகள், அவற்றை கூர்படுத்தும் சாணக்கல், இப்பகுதியில் கண்டறிவது இதுவே முதல்முறை. எருதுகட்டாம் பாறை பகுதியில், சிறு கற்களால், ஆணை குறிக்கும்படி, 6 அடி உயர நெடுங்கல், பெண்ணைக் குறிக்கும்படி, 5 அடி உயர நெடுங்கல் நடப்பட்டுள்ளது. இது, தம் முன்னோரில், முதன்மையான பாட்டன் நினைவாக நடப்பட்டுள்ளதால், பாட்டன் கல் என அழைக்கின்றனர். இது, பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச் சின்னம். இவ்வகை கல், ஏற்காட்டில் வேறு எங்கும் இல்லை என, வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

“தமிழர் தலைநகரில் 2000 வருடங்கள் பழமையான 43 ... "தமிழர் தலைநகரில் 2000 வருடங்கள் பழமையான 43 கல்லறைகள் கண்டுபிடிப்பு"! திருகோணமலை, குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட கும்புறுகஸ்வௌ காட்டுப் பிரதேசத்தி...
வேலூர் மாவட்டம் அருகே சித்திரங்கள் நிரம்பிய இரண்டு... வேலூர் மாவட்டம் அருகே சித்திரங்கள் நிரம்பிய இரண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு! சித்திரங்கள் நிரம்பிய, இரண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வேலூர்...
வாணியம்பாடி அருகே சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டு... வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடன்கட்டை ஏறும் நடுகற்கள்! வேலூர் மாவட்டம், நிம்மியம்பட்டு கிராமத்தில், அரசு பள்ளி வளாகத...
கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்ட... கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு! கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான அரியவகை நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண...
Tags: