ஏற்காடு அருகே 13ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த, நான்கு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

ஏற்காடு அருகே 13ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த, நான்கு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

ஏற்காடு அருகே 13ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த, நான்கு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

ஏற்காடு வட்டத்துக்குள்பட்ட மாரமங்கலம் ஊராட்சியில் உள்ள கோயிலூர் கிராமத்தில் 13- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 4 கல்வெட்டுகளை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், ஆசிரியர் கலைச்செல்வன், பெருமாள், சீனிவாசன், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் இந்தக் கல்வெடுகளைக் கண்டறிந்துள்ளனர்.

சேர்வராயன்மலையில் ஏற்காடு வட்டம் கோயிலூர் கிராமத்தில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள வாணீஸ்வரர் சிவன் கோயிலில் 4 கல்வெட்டுக்களை கண்டறிந்தனர்.

ஏற்காட்டில் கல்வெட்டுடன் கூடிய கோயில் கண்டறியப்படுவது இதுவே முதன் முறையாகும். வாணியாற்றுக்கு கிழக்கு கரையோரம் கோயில் அமைந்துள்ளது.

கல்வெட்டுகள் பெருமாமலை எனவும், கோவிலுள்ள இறைவனை பெருமாமலைநாயினார், பள்ளத்தல உடையார், வன அபயங்கார காத்தராயன் என்றும் குறிப்பிடுகின்றன. அப்பகுதியை கற்கடராயன் என்ற குறுநில மன்னர்கள் சோழர்கள், பாண்டியர்களின் கீழ் ஆட்சி செய்துள்ளனர்.

வாணீஸ்வரர் கோயிலின் கருவறையின் தெற்கு குமுதப்படையில் உள்ள இரு வரி கல்வெட்டில், இராசராச கற்கடமாரன் ஆதித்த மலைபெருமாள் பாதபத்தன் வண்டாவர் என்ற குறுநில மன்னன், வன அபயங்கார காத்தராயன் பெருமாமலை நாயினார் என்ற இந்த இறைவனுக்கு பண்டாரவாயன் சந்தி என்ற பூஜை செய்வதற்காக, பிலாக்காடு என்ற பகுதியை தேவதானமாகக் கொடுத்ததை குறிப்பிடுகிறது.

அர்த்தமண்டபம் முப்பட்டை குமுதத்திலுள்ள கல்வெட்டில், கற்கடமாராயன் என்ற மன்னனின் ஆட்சியில் முதன்மையானவராக இருந்த சகாத்தாரான மழவராயன் என்பவர், பெருமாமலை நாயினாருக்கு இரவும் பகலும் விளக்கு எரியும் வண்ணம், திருநுந்தா விளக்கு எரிக்க பிலாக்காடு என்ற இடத்தில் நிலம் கொடுத்த செய்தியை குறிக்கிறது.

வடக்கு அர்த்தமண்டபம் முப்பட்டை குமுதத்திலுள்ள இரு வரி கல்வெட்டில், இராசராச கூலசகா கற்கடமாராயன் எய்ரையர் என்பவர் பெருமாமலை நாயினாருக்கு உச்சி சந்தியமுது என்ற பூசை செய்ய குட்டுமுட்டல் என்ற பகுதியை தானம் செய்துள்ளார். இந்தத் தானத்தை யாராவது அழிவு செய்தால் அவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிலாக்காடு, குட்டு முட்டல் என தானம் செய்யப்பட்ட பகுதிகள் இன்றளவும் இதே பெயரில் அப்பகுதில் அழைக்கப்படுவது குறிப்பிடதக்கதாகும்.

வடக்கு முப்பட்டை குமுதத்திலுள்ள மற்றொறு இரு வரி கல்வெட்டு, கோச்சடபன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள், சிரி சுந்தரபாண்டிய தேவரரின் 9ஆம் ஆட்சி காலத்தியதாகும். அப்போது சேலநாடு என அழைக்கப்பட்ட அப்பகுதிக்கு சேலஞ்சுற்றிய சேலநாட்டு ராமன் என்பவர் பொறுப்பாளராக இருந்துள்ளார். அவரின் மற்றொரு கல்வெட்டு சிறுமலை என்ற இடத்தில் சென்ற ஆண்டு சேலம் வரலாற்று ஆய்வு மைய குழுவினரால் கண்டறியப்பட்டது.

சேலநாட்டு ராமன் கீழ் ஆட்சி செய்த குலசேகர கற்கடமாராயன், பள்ளத்தல உடையார் பெருமாமலை நாயினார் கோயிலில் பூஜைகள் செய்த மூவருக்கு தானம் செய்ததை குறிக்கிறது. வாணீஸ்வரர் கோயிலில் பிள்ளையார் சிலை அருகே, புதிய கற்காலத்தைச் சேர்ந்த மூன்று கற்கருவிகள் உள்ளன.இந்த கற்கால கருவிகள் வாயிலாக 6,000 ஆண்டுகளுக்கு முன்பே அப்பகுதியில் மக்கள் வாழ்ந்திருப்பது தெரிய வருகிறது என்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: