1,300 ஆண்டுகள் பழமையான சப்தகன்னியர் கற்சிலைகள் பழநியில் கண்டுபிடிப்பு!

1,300 ஆண்டுகள் பழமையான சப்தகன்னியர் கற்சிலைகள் பழநியில் கண்டுபிடிப்பு!

1,300 ஆண்டுகள் பழமையான சப்தகன்னியர் கற்சிலைகள் பழநியில் கண்டுபிடிப்பு!

பழநி அருகே, ஆயக்குடியில், 7ம் நுாற்றாண்டு சப்தகன்னியர் கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி ஆயக்குடி பகுதியில், 7ம் நுாற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட, கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சப்தகன்னியர் சிலைகள், சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டன. சப்தகன்னியர் தொகுப்பு சிலையில், கடைசி நான்கு தெய்வங்களாக வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி உருவங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. சப்த கன்னிமார்களில், முதலில் உள்ள பிரம்மி, மகேஸ்வரி, கவுமாரி உருவங்கள் கிடைக்கவில்லை. ஒரே பலகைக் கல்லில், ஏழு சிலைகளை வடிவமைக்கும் போது, பலகை உடைந்திருக்க வேண்டும். அதனால், சிலை செய்யும் பணியை கைவிட்டுள்ளதும் தெரிய வருகிறது. வடிவியல் கோட்பாடு மூலம் ஆய்வு செய்ததில், வைஷ்ணவி, வராகி இடது கையில் சங்கு சக்கரமும், இந்திராணிக்கு கிரீட மகுடமும், பூணுால் நடு இடுப்பை சுற்றியுள்ள வடிவமைப்பும் உள்ளது. இதன் மூலம், சப்தகன்னியர் சிலை, 7ம் நுாற்றாண்டு, அதாவது, 1,300 ஆண்டுகள் பழமையானது என, தெரிய வந்துள்ளது. இதை, அரசு அருங்காட்சியகத்திற்கு வழங்க உள்ளோம்.
இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர், நாராயணமூர்த்தி கூறினார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கோவில் குளத்தில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன!... கோவில் குளத்தில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன! திருவிடைக்கழியில், கோவில் குளத்தை துார் வாரும் போது, கருங்கல் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. நாகை மாவட்...
கண்டெடுக்கப்பட்ட ஒன்பது ஐம்பொன் சிலைகளை தொல்லியல் ... கண்டெடுக்கப்பட்ட ஒன்பது ஐம்பொன் சிலைகளை தொல்லியல் ஆய்வுக்கு பரிந்துரை! நாவக்குறிச்சி பெருமாள் கோவில் கட்டுமான பணியின் போது, நிலவரை சுரங்கத்தில் கண்ட...
தோண்டத் தோண்ட கிடைக்கும் சங்க கால அரிய கலை பொருட்க... தோண்டத் தோண்ட கிடைக்கும் சங்க கால அரிய கலை பொருட்கள்! கீழடியை மிஞ்சும் அழகன்குளம் அகழாய்வு? தோண்டத் தோண்ட சங்க கால அரிய பொருட்கள் கிடைப்பதால், கீழடி...
சேலம் மாவட்டத்தில் 14, 15ம் நுாற்றாண்டு காலத்து 9 ... சேலம் மாவட்டத்தில் 14, 15ம் நுாற்றாண்டு காலத்து 9 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு! சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த நாவக்குறிச்சி கிராமத்தில் 500 ஆண்டு...
Tags: 
%d bloggers like this: