பூங்குடி நாட்டில் கி.பி. 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூன்று வீரர்களை கொண்ட நடுகல் கண்டுபிடிப்பு!

பூங்குடி நாட்டில் கி.பி. 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூன்று வீரர்களை கொண்ட நடுகல் கண்டுபிடிப்பு!

பூங்குடி நாட்டில் கி.பி. 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூன்று வீரர்களை கொண்ட நடுகல் கண்டுபிடிப்பு!

வீரர்களின் நினைவாக நடுகல் நடும் பழக்கம் பழங்கால தமிழர்களிடம் இருந்து வந்தது. மூன்று வீரர்களின் புடைச்சிற்பத்துடன் கூடிய வீர நடுகல் சிவகங்கை அருகே மேலப்பூங்குடி கண்மாய் கரை அருகே உள்ளது. மூன்றடி நீளம், இரண்டடி உயரம் கொண்டது. மூன்று வீரர்களும் தலையில் கொண்டையுடன் பத்தர குண்டலத்தை காதணியாக அணிந்துள்ளனர். உடைகளில் மாறுபாடு இருக்கிறது. நடுவில் உள்ள வீரனின் வலது கையில் வாள் உள்ளது. மற்ற வீரர்களிடம் இடது கையில் வில், வலது கையில் நீண்ட ஆயுதம் உள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


கீழக்கரை தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது:

முற்காலத்தில் இப்பகுதி பூங்குடி நாடு என அழைக்கப்பட்டது. நடுக்கல்லில் இடதுபுறம் இருப்பவர் அந்த பகுதியின் தலைவனாக இருந்திருக்கலாம். பாண்டிய நாட்டில் இறந்தோரை தாழியில் வைத்து புதைக்கும் பழக்கம் தான் அதிகம். நடுகல் நடுவது அதிகம் இல்லை. இப்பகுதியில் மூன்று வீரர்களை கொண்ட நடுகல் கண்டுபிடித்தது இதுவே முதல் முறை. சிற்பத்தின் அமைப்பு தன்மையை ஆய்வு செய்ததில் நடுகல் கி.பி. 12 ம் நுாற்றாண்டாக கருதலாம். சோழர்களிடம் இழந்த பாண்டிய நாடு சுந்தரபாண்டியனால் மீட்கப்பட்டது. இதற்காக பல இடங்களில் போர் நடந்துள்ளது.

பனிரெண்டாம் நுாற்றாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் நெட்டூர் (இளையான்குடி அருகே) கீழைமங்கலம், மேலைமங்கலம், மட்டியூர் (எஸ்.வி.மங்கலம்), கழக்கோட்டை, திருவேகம்பத்துார் போன்ற இடங்களில் போர் நடந்துள்ளன. அப்போரில் மடிந்தோரை பெருமை சேர்க்கும் வகையில் வீரக்கல் நடப்பட்டிருக்கலாம். இக்கல்லின் பின்பகுதி ஒரு கல்பதுக்கை உள்ளது. அதற்கு அடியில் அவர்கள் பயன்படுத்திய கருவிகள், அணிகலன்கள், மண்பாண்டங்கள் புதைத்து வைத்திருக்கலாம். அப்பகுதியில் மக்களின் வாழ்விடத்திற்கான எச்சங்களும் உள்ளன. எட்டு அடி நீளம், இரண்டரை அடி அகலம் கொண்ட பாறைக்கல் ஒன்று உள்ளது. இப்பகுதியை தொல்லியல் துறை ஆய்வு செய்தால் மேலும் பல அரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் கண்டுப... 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் கண்டுபிடிப்பு! தேன்கனிக்கோட்டை அடுத்த தண்டரையில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகற்களை, அறம் வ...
சோழர் கால நடுகல் சிதைப்பு ஆய்வாளர்கள் அதிர்ச்சி அட... சோழர் கால நடுகல் சிதைப்பு ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்! கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட, ராஜேந்திர சோழன் கால ந...
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே போரில் உயிரிழந... வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே போரில் உயிரிழந்த குறுநில மன்னனின் நடுகல் கண்டுபிடிப்பு! பேரணாம்பட்டு அடுத்துள்ள ரங்கம்பேட்டை கிராமத்தில், போரில...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே யானையுடன் சண்டைய... கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே யானையுடன் சண்டையிடும் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு! கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள, கொத்தகொண்டப் பள்ளியில்...
Tags: