11ம் நூற்றாண்டு சோழர் கால பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

11ம் நூற்றாண்டு சோழர் கால பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

11ம் நூற்றாண்டு சோழர் கால பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தேன்கனிக்கோட்டை அருகே, 11ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர் கால பாறை கல்வெட்டை, அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த மல்லிகார்ஜூன துர்க்கம் மலையில், சிவன் கோவில் உள்ளது. 1,200 அடி உயரமுள்ள இந்த மலையில், பாறை கல்வெட்டு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


மலையின் உச்சியில், திப்பு சுல்தான் கட்டியதாக கருதப்படும் கோட்டை சுவரின் எச்சங்கள் இன்றளவும் உள்ளன. சிவன் கோவிலின் அருகே அம்மன் கோவில் மற்றும் நீர்ச்சுனை உள்ளணீ. இந்த நீர்சுனையில், கடும் வறட்சியிலும் கூட தண்ணீர் வற்றுவது இல்லை. ஒவ்வொரு ஆண்டும், மலை மீதுள்ள கோவிலின் மீது இடி விழுவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இடி விழுந்த காரணத்தால், நந்தி சிலை ஒன்று முழுமையாக சேதமடைந்திருப்பதாக, பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மல்லிகார்ஜூன மலையில், கண்டுபிடித்துள்ள, மூன்று அடி அகலம், ஐந்து அடி நீளம் கொண்ட பாறை கல்வெட்டு, 11 அல்லது, 12 ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர் காலத்தில் செதுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறு, சிறு நாடுகளை ஒன்றிணைத்து, ராஜேந்திர சோழ வளநாடு உருவாக்கப்பட்டது. இந்த சோழ வள நாட்டின் உட்பகுதியாக தான், முரசு நாடு, மாசாத்தி நாடு போன்ற நாடுகள் உருவாக்கப்பட்டன. இதை தான் இக்கல்வெட்டின் முதல் வரி குறிப்பிடுகிறது. ராஜேந்திர சோழ வளநாட்டில் இருக்கும், கல்லக நாட்டின் சேலைபுரத்தை, தனியாக நின்று வெற்றி பெற்ற முரசை பிரான் என்பவன், தீத்தமலையில் இருக்கும் சிவன் கோவிலுக்கு, நிலங்கள் தானமாக தந்துள்ளான். அதற்கான, நான்கு புற எல்லையையும் இந்த கல்வெட்டு குறிப்பிடுவதுடன், தானத்தை யாராவது அழிக்க முற்பட்டால், கங்கையில் இருந்து கன்னியாகுமரி வரையுள்ள பசுவை கொன்றதற்கு சமமாகும் என, கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கூறினர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புலி சின்னத்துடன் சோழர் ... கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புலி சின்னத்துடன் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு! கிருஷ்ணகிரி மாவட்டம், வானமங்கலத்தில், பழமையான ஆஞ்சநேயர் கோவில் திருப்...
ஏற்காடு மலையில் 6 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல்வெட்... ஏற்காடு மலையில் 6 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டும், நடுகல்லும் கண்டுபிடிப்பு! சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ...
ஓசூர் காளிகாம்பா கோவிலில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த... ஓசூர் காளிகாம்பா கோவிலில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த உறவு முறை கல்வெட்டு கண்டுபிடிப்பு! ஓசூர் காளிகாம்பா கோவிலில், 14-ம் நூற்றாண்டை சேர்ந்த உறவு முறை ...
சேலம் அருகே 11 மற்றும், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த... சேலம் அருகே 11 மற்றும், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு! கல்வராயன் மலை, பெரிய குட்டிமடுவு கிராமத்தில், சோழர் கால சிற்ப...
Tags: