திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாற்றுச் சின்னம்: பத்தாம் நூற்றாண்டு நடுகல்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாற்றுச் சின்னம்: பத்தாம் நூற்றாண்டு நடுகல்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாற்றுச் சின்னம்: பத்தாம் நூற்றாண்டு நடுகல்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர்கள் பத்தாம் நூற்றாண்டில் பரந்தாக சோழன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த நடுகல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

திருவண்ணாமலை பழங்கால சின்னங்கள் நிறைந்துள்ள ஒரு மாவட்டம். இங்கு வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ஆறு அடி உயரம், மூன்று அடி அகலம் கொண்ட நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போருக்குச் செல்லும் கோலத்தில் வேட்டி அணிந்துள்ள வீரன் ஒருவன், இடப்பக்கம் பார்த்தபடி நிற்கிறான். அவனது வலக்கையில் குத்தீட்டி ஒன்றை பிடித்துள்ளான். குதிரையில் வரும் ஒருவனை குத்த முயற்சிப்பதுபோல், வீரனின் இடக்கை குதிரையின் கடிவாளத்தை பற்றியுள்ளது. குத்தீட்டி பிடித்துள்ள வீரன், காதுகளில் வளையங்கள் அணிந்துள்ளான். தலையில் தலைப்பாகை அணிந்துள்ளான். இடுப்பில் கச்சை ஒன்றும் உள்ளது.இக்காட்சி அக்கல்லில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

இந்த நடுகல் குறித்து, வரலாற்று ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த முனைவர் ஏ. சுதாகர், “கம்மபாடிவராயரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் வீரன் ஒருவனின் வீரத்தை மெச்சி கீழ்க்கலாம்பாடி என்ற கிராமம் பரிசாக அளிக்கப்பட்டதை இது குறிக்கிறது. தற்போது அந்தக் கிராமம் கருக்கலாம்பாடி என்று அழைக்கப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: