குளித்தலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமிழித் தூம்புக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

குளித்தலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமிழித் தூம்புக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், வடசேரி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில், 1000 ஆண்டுகளுக்கு முந்தைய குமிழித் தூம்புக் கல்வெட்டு ஒன்று மத்தியத் தொல்லியல்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குளித்தலை சுற்றுவட்டாரப் பகுதியில், பாசனத்துக்குப் பயன்பட்ட ‘குமிழித் தூம்புக் (மதகு) கல்வெட்டு’ ஒன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘ஊற்றத்தூர் வளநாடு’ என்று சோழர்கள் காலத்தில் அழைக்கப்பட்ட இந்தப் பகுதியில் கிடைத்திருக்கும் குமிழித் தூம்புக் கல்வெட்டு, ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. குறிப்பாக, பராந்தகச் சோழருக்கும், ராஜராஜ சோழருக்கும் இடைப்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டில் ”ஸ்ரீ நக்கனார் சேவித்தார்” என்று தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலத்தில் மன்னர்கள் மட்டுமல்லாமல் நாடுகாவல் அதிகாரிகள், உள்ளூர் முக்கியஸ்தர்கள், தேவரடியார்கள் என்று பலரும் மக்களுக்குப் பயன்படும் வகையில் மதகு அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வகையில், நக்கனார் என்பவர் அமைத்துக் கொடுத்த குமிழித் தூம்பு இது. ’சேவித்தார்’ என்று மரியாதை விகுதியுடன் பொறிக்கப்பட்டிருப்பதால், இவர் இந்தப் பகுதியில் முக்கிய நபராக இருந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் அமைத்துக்கொடுத்த குமிழித் தூம்பு இன்று வரையிலும் நல்லமுறையில் வேலை செய்கிறது என்பது வியப்பானது. இந்தப் பகுதியில் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: