யாழ்ப்பாணம், நல்லூர் வீதியில் “நடிகர் ரஜினியை தலைவன்” என்றது, உலகத் தமிழினத்தை தலை குனிய வைத்தது!

யாழ்ப்பாணம், நல்லூர் வீதியில் "நடிகர் ரஜினியை தலைவன்" என்றது, உலகத் தமிழினத்தை தலை குனிய வைத்தது!

யாழ்ப்பாணம், நல்லூர் வீதியில் “நடிகர் ரஜினியை தலைவன்” என்றது, உலகத் தமிழினத்தை தலை குனிய வைத்தது!


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


எத்தனை ஆயிரம் மாவீரர்கள் வாழ்ந்த புனித பூமியை ஒரே நாளில் அசிங்கம் செய்ய வைத்து விட்டனர் சில விஷமிகள். நடிகர் ராஜனிகாந்தை கூட்டி வந்து அரசியல் வியாபார நாடகம் செய்ய இருந்தது லைக்கா என்ற லண்டன் நிறுவனம். ஆனால் அவர் வருகைக்கு தமிழகத்திலிருந்து கண்டன குரல்கள் வந்த நிலையில், ரஜனியின் தனது வருகையை ரத்து செய்தார். ரத்து செய்த காரணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஈழத் தாயகத்தில் இது வரை எந்த தீர்வும் மக்களுக்கு கிடைக்காத நிலையில், எப்படி சினிமா கூத்தாடிகளை அழைத்து விழா கொண்டாடுவது என்பது கேள்வி குறியாகவே தென்படுகிறது.

யாழ்ப்பாணம், நல்லூர் வீதியில் "நடிகர் ரஜினியை தலைவன்" என்றது, உலகத் தமிழினத்தை தலை குனிய வைத்தது!

யாழ்ப்பாணம், நல்லூர் வீதியில் “நடிகர் ரஜினியை தலைவன்” என்றது, உலகத் தமிழினத்தை தலை குனிய வைத்தது!

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ரூபாய் 20 கோடியில், 150 வீடுகள் அமைத்து கொடுப்பதாக லைக்கா உறுதியளித்திருந்தது. ஆனால், இந்த வீடுகளை ரஜனி போன்ற நடிகர்கள் கையால் வீடுகளை பகிர்ந்தளிப்பதன் அவசியம் அல்லது நோக்கம் என்ன என்பதை சிந்தனைக்கு எடுக்க வேண்டியுள்ளது? ரஜனியின் ஈழ, வருகையை தடுத்து நிறுத்தியவர்களுக்கு எதிராக யாழ் நல்லூரில் ஒரு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ”எமது தலைவன் எம்மை காண்பதை தடுக்க நீங்கள் யார்” என்பது போன்ற பதாகைகள் ஏந்திய வண்ணம் யாழ் புனித வீதியான நல்லூர் வீதியில் மக்கள் முழக்கமிட்டும், பின்னர் நல்லூர் கந்தசாமி கோயில் முன் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களின் தலைவன், ரஜினியாம்.

யாழ்ப்பாணம், நல்லூர் வீதியில் "நடிகர் ரஜினியை தலைவன்" என்றது, உலகத் தமிழினத்தை தலை குனிய வைத்தது!

யாழ்ப்பாணம், நல்லூர் வீதியில் “நடிகர் ரஜினியை தலைவன்” என்றது, உலகத் தமிழினத்தை தலை குனிய வைத்தது!

இதில் குழந்தைகள், தாய்மார்கள், இளைஞர்கள், யுவதிகள் என பல கலந்து கொண்டனர். இந்த போராட்டத்துக்கு வந்தால் தான் வீடுகள் கொடுக்கப்படும் என கூறியே அழைத்து வந்ததாக, போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் பலர் கூறிகின்றனர். திலீபன் உண்ணாவிரதம் இருந்து வீரகாவியமான அதே வீதியில் நடிகர் ரஜனிக்கு ஆதரவாக போராட்டம். போராட்டத்தில் வயதானவர்கள் கலந்துக் கொண்டார்கள். இவர்கள் இளம் சந்ததியினருக்கு ஈழ வரலாறுகளை சொல்லி கொடுப்பதை விடுத்து இவர்கள் “தலைவன் ரஜனி” என்ற உச்சரிப்போடு முழக்கமிட்டது வேதனைக்குரியது. அங்கு சென்ற போராட்டக்காரர்கள் மற்றும் இதனை நடத்த பின்னணியில் இருந்தவர்கள் அனைவரும், 2009 இறுதிப் போரின் போது நடந்த இனப் படுகொலையை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனத்திற்காக உயிரை மாய்த்துக் கொண்டு வீர காவியமான போராளிகளின் தியாகங்களை மறந்து விடலாகாது.

நடிகர் ரஜினி ஈழப் பயணம் தடைபட்டதையொட்டி விரிவான மூன்று பக்க அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அது ஒரு வகையில் ஏற்புடையாகதாக இருப்பினும், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில், பின்னணியிலிருந்து செயலாற்றியவர்களின் பங்களிப்பை மன்னிக்க இயலாது.

ஆனால், புலம் பெயர்ந்து வாழ்ந்து வருவோர், இப்பொழுதாவது விரைந்து செயல்பட்டு, தாயகத்தில் உள்ள மக்களின் நிலை கருதி, உடனடியாக உதவிட முன்வர வேண்டும். இல்லையெனில், அங்கு துன்பப்படும் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி, பல புல்லுருவிகள் ஊடுருவி விட வாய்ப்பாக அமைந்து விடும் என்று உலகத் தமிழர் பேரவை கருதுகிறது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

முதல் முறையாக இலங்கை செல்லும் ரஜினி – ஈழத் த... முதல் முறையாக இலங்கை செல்லும் ரஜினி - இலங்கை தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்குகிறார்! லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவு...
ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசிய... ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் - ரஜினிகாந்த் அறிக்கை! இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், "நான் ஒரு கலைஞன்...
புலிகளின் இயக்கத்திற்கு எதிரான கருத்துக்கள் இடம் ப... என்னதான் புலிகளுக்கு எதிரான கருத்தாக இருந்தாலும், தமிழ் மக்கள் மனதில் இடம்பெற்ற தலைவன் பிரபாகரன் படம் போடாமல் எந்த புத்தகமும் இந்த பூலோகத்தில் விற்பனை...
தொடரும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம் – உலக... தொடரும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம் - அனைவரும் இவர்கள் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் ! முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப...
Tags: 
%d bloggers like this: