காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு இணைந்து இன்று தொடருந்து (ரயில்) மறியல் போராட்டத்தில் உலகத் தமிழர் பேரவை களமாடும்!

 

காவேரி தமிழகத்துக்கு மட்டும் உரிமையானது அல்ல. வங்கக் கடலுக்கும் உரிமையானதுதான்!

காவேரி தமிழகத்துக்கு மட்டும் உரிமையானது அல்ல. வங்கக் கடலுக்கும் உரிமையானதுதான்!

தமிழர்களில் காவேரி ஆற்று நீர் உரிமைப் போராட்டத்தில் நீதி மன்றம் உத்தரவிட்டும், இந்திய மைய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வராததை கண்டித்தும், அவ்வாரியத்தை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என கோரி மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க.) இன்று (அக்டோபர் 18) தமிழகத்தின் பல பகுதிகளில் தொடருந்து மறியல் போராட்டம் நடத்துகிறது. ம.ஜ.க.வின் தலைமை இப்போராட்டத்திற்கு ஆதரவு தர கேட்டுக் கொண்டதற்கிணங்க, உலகத் தமிழர் பேரவையும் இப்போராட்டத்தில் இணைந்து கலந்து கொள்கிறது.

தமிழர்களின் காவேரி ஆற்று நீர் உரிமைப் போராட்டத்தில், உரிமையை நிலை நாட்டும் வகையில் ம.ஜ.க.வோடு இணைந்து, உலகத் தமிழர் பேரவையும் இன்று நடைபெறும் தொடருந்து போராட்டத்தில் பங்கு கொள்கிறது. இப்போராட்டம் தமிழகத்தின் கீழ் கண்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுகிறது:

– சென்னை- கடற்கரை (பீச்) ஸ்டேஷன்- 4 மணி
– விழுப்புரம் – திண்டிவனம் ரயில் நிலையம்- 4 மணி
– மதுரை- மதுரை ரயில் நிலையம்- 4 மணி
– வேலூர் கிழக்கு- காட்பாடி ரயில் நிலையம்- 4 மணி
– வேலூர் மேற்கு- கண்டோன்மென்ட் ரயில் நிலையம் – 4 மணி
– திருப்பூர்- திருப்பூர் ரயில் நிலையம்- 4 மணி
– தூத்துக்குடி- 2ம் கேட் – 4 மணி
– திருச்சி- மத்திய ரயில் நிலையம்- 3.30மணி
– கும்பகோணம்- ரயில் நிலையம்- 3.30மணி
– கடலூர் (வ)- ஆர்ச் கேட் நெய்வேலி- 10.30மணி
– காரைக்கால்- ரயில் நிலையம்- 11மணி
– திண்டுக்கல் மேற்கு-பழனி ரயில் நிலையம் -11 மணி

சென்னை கடற்கரை (பீச்) தொடருந்து நிலையத்தில் நடைபெறும் போராட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி கலந்து கொள்ள உள்ளார். அதுபோல், உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காவேரி ஆற்று நீர் உரிமைப் போராட்டத்தில் வாய்ப்புள்ள இடங்கள் பங்கெடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறது.

தலைமை, உலகத் தமிழர் பேரவை
9841688937
www.worldtamilforum.com

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒ... 'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு! சென்ற சனிக்கிழமை (0...
தமிழர்களுக்கு வெற்றி – உச்சநீதி மன்றம் காவிரி தீர்... தமிழர்களுக்கு வெற்றி – உச்சநீதி மன்றம் காவிரி தீர்ப்பு!  காவிரி தீர்ப்பு : நீதி நிலைநாட்டப் பெற்றது. இது தமிழர்களுக்கு தமிழ் நாட்டு மக்களின் தொடர் ப...
காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் உடனடியாக தலையிட... காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் - தொடங்கப்பட்ட கையெழுத்தியக்கத்திற்கு உலக முழுவதுமிருந்து 500 மேற்பட்டவர்கள் பதிவு! காவி...
காவேரி தமிழகத்துக்கு மட்டும் உரிமையானது அல்ல. வங்க... காவேரி தமிழகத்துக்கு மட்டும் உரிமையானது அல்ல. வங்கக் கடலுக்கும் உரிமையானதுதான்! பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி,...
Tags: 
%d bloggers like this: