Protected: சிறப்பு அழைப்பு

1

சிறப்பு அழைப்பாளர்களுக்கு மட்டும் : உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியின் அடுத்த கட்டம் – அக்டோபர் 1, சென்னையில் கூட்டம்

உலகத் தமிழர் பேரவையின் வணக்கம்.

தமிழ் தேசிய தலைவர் திரு. வேலுபிள்ளை பிரபாகரன் தலைமையில் இறுதிப் போர் நடைபெற்று வந்த போது, ஆங்காங்கு உலகின் முக்கிய தலைநகரங்களில் உலகத் தமிழர்கள் வெற்றிகரமாக ஒன்றிணைந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது நமக்கெல்லாம் நினைவிருக்கலாம்.

உலகத் தமிழர்களால், ஜனா என எல்லோராரும் அன்போடு அழைக்கப்பட்டு வந்த ஐயா முனைவர் திரு. ஜனார்த்தனம் அவர்களால் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்பட்டு வந்த உலகத் தமிழர் பேரவையின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னியின் தலைமையில், தனது செயல்பாடுகளை வேகமாகவும், விவேகமாகவும், உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியினை செய்ய முனைந்துள்ளதை ஏற்கெனவே நீங்கள் அறிந்த விடையம்தான்.

p1-01102016_meeting_image

பக்கம் 1 (பெரிதாக்கி படிக்க, படத்தை அழுத்தவும்)

p2-01102016_meeting_image

பக்கம் 2 (பெரிதாக்கி படிக்க, படத்தை அழுத்தவும்)

இதற்காக தற்போது தனியாக இணையம், முகநூல், டிவிட்டர், வாட்ஸ்அப் போன்ற நவீன மின்னணு தொழில் நுட்பத்தின் துணை கொண்டு, தனது அதிமுக்கிய குறிக்கோளான உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியினை வேகமாக செயலாற்றி வருகிறது.

கல்வி, கலாச்சாரம், பன்பாடு, மெய்யியல் என தமிழனின் அனைத்து வரலாற்று சக்திகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம்தான் இனி இந்த சனநாயக உலகப் போக்கை வெற்றி கொள்ள இயலும் என்பதும் கண்கூடு. இதற்கான முன்னெடுப்பே உலகத் தமிழர் பேரவை.

அன்மையில் சென்னையில் சிறிதாக நடத்தப்பட்ட உலகத் தமிழர் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அமெரிக்கா, கனடா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, ஈழம், தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள தமிழர்களிடம் கிடைத்த வரவேற்பே இதற்கு சான்று. அத்தோடு, அவர்கள் தாங்களாகவே அனைத்து ஒத்துழைப்பும் கொடுப்பதாக உறுதியளித்துள்ளதும் எம்முடைய பணிக்கு ஊக்கமளித்துள்ளதாகவே நினைக்கிறோம்.

இந்நிலையில் மேலும் பணியினை வேகமாக செய்திட வரும் 2016ம் ஆண்டு அக்டோபர் முதல் நாள் அன்று சென்னையில் பல நாட்டு தமிழர் தலைவர்கள் முன்னிலையில் சிறப்பான ஆலோசனைக் கூட்டமும், அவர்களை வைத்தே அரங்க கூட்டமும் நடத்த உலகத் தமிழர் பேரவை நினைத்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு வர பலரும் ஒத்துழைப்பு தருவதாகவும் உறுதியளித்துள்ளது மன நிறைவை தருகிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சிறப்பு மிக்க கூட்டத்திற்கு உங்கள் நாட்டின் தமிழர்கள் சார்பில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். உங்களது வருகையினை விரைவில் உறுதி செய்வீர்கள் என நினைக்கிறோம்.

உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பே, உலக போக்கை நமது வழிக்கு கொண்டு வரும். வருங்கால தமிழ் இன வாரிசுகளுக்காக இப்பொழுதிலிருந்தே நாம் இதை விதைப்போம்.

நன்றி

உலகத் தமிழர் பேரவையின் சார்பாக

அக்னி

ஓருங்கிணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
உலகத் தமிழர் பேரவை
சென்னை.

தொடர் கொள்ள:

+91 – 7200828850
+91 – 9841727759
+91 – 9841688937

உலகத் தமிழர் பேரவையின் இணையம் : worldtamilforum.com
உலகத் தமிழர் பேரவையின் மின்னஞ்சல் : vorldtamilforum@gmail.com
உலகத் தமிழர் பேரவையின் டுவீட்டர் : https://twitter.com/ForumTamil
உலகத் தமிழர் பேரவையின் முகநூல் :https://www.facebook.com/worldtamilforum/

Tags: