யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பும் – அரசியலும்….!

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பும் – அரசியலும்….!

யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய ஆவண நூல்கள், அரிய ஒலைச் சுவடிகள் என தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. பெருமைமிகு இந்த யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் தேதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் தீயிட்டு கொழுத்தப்பட்டது என்பதுதான் நாம் அறிந்த ஒன்று. ஆனால், அதற்கு பின் ஒரு அரசியல் நிஜக்கதை வேறொன்று இருந்து வருகிறது.

இன்று உலகத் தமிழர் பேரவை தலைவரான நான் (அக்னி சுப்ரமணியம்) 2016-ல் யாழ் பயணம் மேற்கொண்டேன். இன்றுள்ள யாழ் நூலகத்திற்கும் சென்று வந்தேன். யாழ் நூலகம் பற்றி கேள்வியுற்றதுதான் கீழே உள்ள பதிவு.

1. ஜே.ஆர். என அறியப்பட்ட ஜூனியஸ் ரிச்சட் ஜெயவர்தனா, இலங்கை நாட்டின் அதிபராகவும், ஐக்கிய தேசியக் கட்சி-யின் தலைவராக இருந்தபோது தான் யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் தேதி எரியூட்டபட்டது. இவரது கட்சியின் உறுப்பினராகவும் பின்னர் அமைச்சராகவும் இருந்த காமினி திசாநாயக்கா என்பவர்தான் யாழ் நூலகம் எரியூட்டிய முக்கிய சூத்திரதாரி என பின்னர் நிருபணமானது.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பும் – அரசியலும்….!

ஆம், ஜே.ஆர். ஜெயவர்தனா-வுக்கும், யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கும் என்ன தொடர்பு?

சிங்களவரான ஜே.ஆர். ஜெயவர்தனா, தான் வழக்குரைஞராக படிக்கும் காலத்தில் ஒவ்வொரு வார இறுதியில், அதாவது சனி – ஞாயிறு நாட்களில் வழக்குரைஞர் தொடர்பு புத்தகங்களை படிக்க யாழ் நூலகம் வந்து தங்கி சென்றார். தொடர்ந்து நூலகம் வந்ததால், நூலகத்திலிருந்து தமிழனின் அரிய நூற்களான அகத்தியர் எழுதிய ஒலைச் சுவடிகளை படிக்க – பார்க்க நேர்ந்தது. தமிழனின் வரலாற்றுத் தொன்மைகளை சுமந்திருந்த அந்த நூலகத்தின் மீது அன்றே அவரது கண் பதிந்தது. காலம் சிங்களவரான ஜே.ஆர். ஜெயவர்தனாவுக்கு அதிபர் பதிவியை வழங்க, தமிழர்களை காவு வாங்கியவருக்கு, தமிழர் வரலாற்றை விட்டு விட்டு செல்வாரா? அதனால், திட்டமிட்ட அரசியலை தமிழர்களின் வரலாற்றை சுமந்து நின்ற யாழ் நூலகத்தை எரித்து, தமிழனின் வரலாற்றை எரித்து மொத்தமாக மறைத்து சென்றார்.

2. தீ-யிக்கு பின்னர், புனரமைப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாண பொதுசன நூலகம் அன்றைய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வீ. ஆனந்த சங்கரி-யால் 14-02-2003 அன்று திறந்து வைக்கப்பட்டதாக மூன்று மொழிகளில் எழுதிய கல் பதாகை ஒன்று நூலகம் முகப்பில் பதிக்கப்பட்டிருந்ததை பார்த்து ஆச்சிரியப்பட்டேன். ஆனால், அன்று பதியப்பட்ட கல்லில் சொன்னபடி ஆனந்த சங்கரியால் திறக்க படவில்லை. ஏன் என வினவியபோது, 2003 கால கட்டங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ் இருந்து வந்த நிலையில், அந்த திறப்பு விழா-வை விடுதலைப்புலிகள் தடை செய்தனர் என்பதாக சொல்லப்பட்டது.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பும் – அரசியலும்….!

2018-ல் வடமாகாண செயலகத்தில், நூலகத் திறப்பு விழா-விற்காக 2013-ல் பதிக்கப்பட்டிருந்த அந்த பெயர் கல் பதாகையை அகற்றப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இன்று வரை அகற்றப்படவில்லை என சொல்லப்படுகிறது. திறக்கப்படாத கல் பெயர் பதாகை இன்னும் எதற்காக என்ற அரசியல் இன்று வரை உலகத் தமிழர்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை.

நூலகத்தில் இருந்த ஆவணங்களின் நகல்கள் இல்லாததால், தமிழன் இன்றும் வரலாற்றை தேடி அலைய வேண்டியவனான்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: