உலகத் தமிழர் பேரவை – யின் ஒருங்கிணைப்பாளராக திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களைப் பற்றிய சில குறிப்புகள், உங்களது பார்வைக்கு….

உலகத் தமிழர் பேரவை - யின் ஒருங்கிணைப்பாளராக திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களைப் பற்றிய சில குறிப்புகள்

உலகத் தமிழர் பேரவை – யின் ஒருங்கிணைப்பாளராக திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களைப் பற்றிய சில குறிப்புகள்

உலகத் தமிழர் பேரவை – யின் (www.worldtamilforum.com) இன்றைய ஒருங்கிணைப்பாளராக திரு. அக்னி சுப்ரமணியம் அவர்கள் இருந்து வருகிறார்.

– 2008ம் ஆண்டு – ஐ.நா.வின் UPR – அமைப்பில் இலங்கை குறித்த அறிக்கை அவரால் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வறிக்கை இன்றும் ஐ.நா. இணையத்தில் காணலாம்.

– 2009-ம் ஆண்டு – ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரண பொருட்களை சுமந்து வந்த கப்பலான ‘வணங்காமண்’ (படம் இணைப்பு) என்ற கப்பலை, சென்னைக்கு எடுத்து, பின்னர் செஞ்சிலுவை சங்கங்கள் மூலம் இலங்கை வன்னிப்பகுதியில் அமைந்திருந்த மெனிக் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களுக்கு கொண்டு சேர்த்தது.

– 2009-ம் ஆண்டு – தமிழனப் படுகொலைகள் புத்தகம் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொண்டு வந்து, பரவலாக உலகின் பல இடங்களுக்கு கொண்டு சேர்த்தது (அட்டை இணைப்பு). இன்றும் அந்த ஆவணப் புத்தகத்தை பல இடங்களில் சான்றுகளாக காட்ட பயன்பட்டு வருகிறது. உம். ஐ.நா.வின் மனித உரிமை ஆணைய அறிக்கை எண் : (227. Furthermore the above-mentioned military presence in the North and East should be immediately removed. It impedes all efforts for reconciliation and poses a security threat to the Tamil people living in their traditional homeland. No Nation should be occupied by an alien Nation and definitely no Nation should be occupied and observed 24 hours daily by its “own government”. Tamil people constantly faced massacres (Massacres of Tamils: 1956- 2008 (Manitham Publishers, Chennai, 2009), which all amount to Genocide (if you like to a slow-motion genocide). It is, therefore, vital that the Tamil people’s right to self-determination is not rejected.)

– ஐ.நா.வின் மூன்று பேரின் அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து 300+ பக்கங்கள் கொண்ட ஒரு தமிழில் புத்தகமாக “போர்க் குற்றவாளி” என வெளியிடப்பட்டது. மொழி பெயர்தவர் அக்னி சுப்ரமணியம்.

– 2008 – 2009-களில் ஈழ போர் சூழலின் போது, இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அமர்த்தி, பல்வேறு நாட்களில் சென்னையில் ஊடக சந்திப்புகளை நடத்தியது. அதுபோல், இதே காலகட்டத்தில் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து தமிழக அரசியல் தலைமைகளிடம் நேரிடையாக சந்திப்புகளை நிகழ்த்தி ஈழம் தொடர்பான நிலையை விளக்கியது.

– பிரபாகரனின் தாயார் திருமிகு. பார்வதியம்மாள் இரண்டாம் முறை தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகளில் முக்கிய பங்களிப்பு. (அரசியல் காரணங்களினால் பின்னர் இது தடைப்பட்டது)

– தமிழக மீனவர்கள் இலங்கையில் 2009 முன் சிறைப்பட்டிருந்தோர் பலரின் விடுதலைக்கு காரணமாக இருந்தவர்.

– தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இருந்த ஈழத் தமிழர்கள் பலரின் விடுதலைக்கு காரணமானவர்.

– இந்திய குடிமகன்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வெளிக்கடை மற்றும் மேகசின் சிறையிலிருந்தவர்களை இந்திய – இலங்கை சிறைவாசிகள் பரிமாற்ற ஓப்பந்தம் ஏற்படுத்த அழுத்தம் கொடுத்து சுமார் 35 இந்தியர்களை மீட்டெடுத்து, இந்தியாவுக்கு கொண்டு வந்தவர்.
*************************

ஈழ ஆதரவாளன் என்றதால், 8.5 மாதம் சிறை :

2000-ம் ஆண்டு பொங்கல் தினத்தின் முந்திய நாள் தமிழக காவல் துறை ஈழத் தமிழர்களுக்கு ஆதராவாக இருந்தவர் என குற்றம் சாட்டி, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை பிடித்து, சுமார் 8.5 மாதங்கள் அரசு விருந்தினராக! (சிறைவாசி) சிறைக் கம்பிகளை பின்னால் மகிழ்ச்சியுடன் இருந்துள்ளார்.

– பார்மா, இன்றைய மியன்மாரின் விடுதலைக்கு குரல் கொடுத்தவர். காஷ்மீர் மனித உரிமைகளுக்காக குரல் எழுப்பியவர்.
*************************

அக்னி-யின் இலங்கை தமிழர் பகுதிகளில் பயணம் :

ஏப்ரல், 2016-ம் ஆண்டு, இரண்டாம் வாரத்தில் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் இறுதிப் போர் நடைபெற்ற இடங்களுக்கும், யாழ்பாணத்தில் வட மாகாண சபையின் மாண்புமிகு முதலமைச்சர், வடமாகாண சபையின் சபாநாயகர் மாண்புமிகு திரு. சிவஞானம் , மாண்புமிகு கல்வி அமைச்சர் மற்றும் வடமாகாண சபையின் முக்கிய உறுப்பினர்களை சந்திப்பு. இதனை தொடர்ந்து, யாழ்பாணத்தில் தங்கியிருந்த பின்னர், இறுதிப் போர் நடைபெற்ற கிளிநொச்சி, பரந்தன், புது மாத்தலன், பொக்கனை, சாளை, புதுக்குடியிருப்பு, இரணமடு, விஸ்வமடு, முள்ளிவாய்கால் என அனைத்து போர் பகுதிகளுக்கும் சென்று, அங்குள்ள உண்மை நிலையை பார்த்து, மக்களையும் சந்தித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: