உலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யாங்-ஷிக் அவர்களின் தமிழில் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு!

உலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யாங்-ஷிக் அவர்களின் தமிழில் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு!

உலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யாங்-ஷிக் அவர்களின் தமிழில் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு!

கொரிய நாட்டு இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து தரம் வாய்ந்த நூல்களாக வெளியிடும் முதல் முயற்சியாக உலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யாங்-ஷிக் (Ms. KIM Yang-shik) அவர்களின் கவிதை நூல் இன்று சனிக்கிழமை 10-03-2018 மாலை 5.30 மணியளவில் ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் நடை பெற்றது.

கவிஞர் கிம் யாங்-ஷிக் அவர்கள் இந்திய நாட்டிற்கும் கொரியாவிற்கும் இடையில் பண்பாட்டுப் பாலமாகச் செயல்படுகின்றார். வங்கக்கவிஞர் இரவீந்திரநாத்தாகூரின் அனைத்துப் படைப்புக்களையும் கொரிய மொழியில் மொழி பெயர்த்ததோடு கொரிய நாட்டில் தாகூர் சங்கம், இந்தியக் கலைக்காட்சியகம், போன்றவற்றை திறம்பட நடத்தி வருபவர். இவர் எழுதிய கவிதைகள் 15-க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இந்தியப் பண்பாட்டை கொரிய நாட்டில் விதைத்து வளர்த்து வரும் இவரது அரிய தொண்டினைப் பாராட்டி இந்திய அரசு பல ஆண்டுகளுக்கு முன்னர் பத்மஸ்ரீ விருதினை வழங்கி இவரை சிறப்பித்தது. இந்தியப் பல்கலைக்கழகங்களில் கொரியப் பண்பாட்டுக் கல்வி தொடர்பான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு தாராளமாக நிதியுதவியும் இவர் செய்து வருகின்றார். முப்பது தடவைகளுக்கு மேல் இந்தியாவிற்கு வருகை தந்த உலகப்புகழ் வாய்ந்த இக்கவிஞர் இரண்டாவது முறையாக இப்போது தமிழகம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Kim-Yang-shik-04aஇந்நூலை வல்லமை மின்னிதழின் நிர்வாக ஆசிரியர் பவள சங்கரி சிறப்புற மொழி பெயர்த்துள்ளார்.

இந்நூலை தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன் அவர்கள் வெளியிட டாக்டர் வி.ஜி.சந்தோசம் பெற்றுக் கொண்டார். சென்னையில் உள்ள கொரிய குடியரசு நாட்டின் தூதர் திரு. ஹியுங் டே கிம் (Hyung Tae Kim, Consul General, Republic of Korea) வாழ்த்தி பேசினார். இந்தோ-கொரிய கலாச்சார மற்றும் செய்தி மையத்தின் இயக்குநர் டாக்டர் ரதி ஜாபர் பங்கெடுத்து சிறப்பித்தார்.

இறுதியில் கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யாங்-ஷிக் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.

உலகத் தமிழர் பேரவையின் சார்பாக தமிழ் புத்தகங்களை அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி உலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யாங்-ஷிக் அவர்களுக்கு பரிசளித்தார்.

பல்வேறு அறிஞர்கள் பங்கேற்ற இந்த அரிய நிகழ்ச்சி அரங்கு நிறைந்த காணப்பட்டது மிகுந்த சிறப்படைந்தது.

சிறப்பு பட தொகுப்பை காண….

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: