வரும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு சக்திகளை தமிழர்கள் நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்!

வரும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு சக்திகளை தமிழர்கள் நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்!

வரும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு சக்திகளை தமிழர்கள் நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்!

இந்தியாவின் தேச பிதாவாக நினைக்கப்படுபவர், மகாத்மா காந்தி.

தேச விடுதலைக்காக உழைத்த பெயரை வைத்துக் கொண்ட காங்கிரஸ் கட்சியை பின்னர் தவறாக யாரும் பயன்படுத்த கூடாது என்பதற்காக, இந்தியா விடுதலையானதும் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் என்றார். ஆனால், இந்திய மத்திய அரசின் ஆட்சியை தங்களிடம் தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கோடு காங்கிரஸ் என்ற பிராட்டை (Brand) விடாமல் பிடித்துக் கொண்டது நேரு குடும்பம். அதோடு மட்டுமல்லாது, தங்களுக்கு எவ்வித உறவுமில்லாத ‘காந்தி’ என்ற பெயரை அடைமொழியாக்கிக் கொண்ட நேரு குடும்பத்தின் நோக்கம் ஆட்சியின் தலைமையை பிடிப்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

ஒருங்கிணைந்த இந்தியா-வே, பிரிட்டிஷ் இந்திய ஆட்சியின் போதுதான் உருவாக்கப்பட்ட ஒன்றே. விடுதலையின்போது, மொழி வழியான தேசிய இனங்களில் ஒன்றாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியதை எதிர்த்து போராடியதைத் தவிர, இந்தியா என்ற அமைப்பு என்றுமே ஒன்றுபட்டதாக இருந்ததில்லை என்பதே உண்மை. இந்திய விடுதலைக்கு பின்பும், மொழி வழி மாநிலங்கள் தோன்றுவதற்கு ஏறக்குறைய எல்லா மாநில மக்களும், குறிப்பாக தமிழக விடுதலைப் போராட்ட தியாகிகளும் போராடியே பெற்றனர்.

நேரு குடும்ப வாரிசுகள், பரம்பரை பரம்பரையாக 6 தலைமுறை ஆட்சியில் 60 ஆண்டுகள் பதவி சுகம் போதும்

நேரு குடும்ப வாரிசுகள், பரம்பரை பரம்பரையாக 6 தலைமுறை ஆட்சியில் 60 ஆண்டுகள் பதவி சுகம் போதும்

காந்தி சொல்படி கலைக்கப்படாத காங்கிரஸ், நேருவின் நேரடி வாரிசான இந்திரா-விற்கு சென்றது. வெளிநாட்டிலிருந்த இந்திராவின் மகனான ராஜீவ் – வின் மனைவியாக இத்தாலியின் குடிமகளான சோனியா காதலியாகி மனைவியாகிறார். இவர்கள் குடும்ப பிரச்சனையில் நாம் தலையிட வேண்டியதில்லை. ஆனால், இத்தாலிய சோனியா -வை எப்படி காங்கிரஸ் என்ற கட்சியின் இந்திய குடிமகன்கள் ஏற்றுக் கொள்ள முடிந்தது. பதவி வெறி பிடித்த அரசியல் கட்சி, ஆட்சியை பிடிக்க இத்தாலிய சோனியா -வை முன்நிறுத்தி ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதுதான் நிதர்சனம். இதை புரிந்தது கொண்ட இத்தாலிய சோனியா, தான் ஆட்சிக் கட்டிலில் ஏறாமல், தனக்கு கீழ் கைப்பாவையாக இருக்கும் மன்மோகன் சிங்கை வைத்துக் கொண்டு ஆட்சி செய்தார். இப்போது இத்தாலிய சோனியா-வுக்கு பிறந்த ராகுல் என்ற பொடியனையும், பிரியங்கா என்ற பொடிச்சியையும் நம்பி இந்திய தேசிய கட்சியை அடகு வைத்துள்ளார். ராகுலுக்கோ, பிரியங்கா அரசியலில் வருவதற்கே என்ன தகுதியுள்ளது. இந்தியர் போலவோ, தமிழர் போன்றோ மொழி பேசி, உடையணிந்து கொள்வதால் எல்லோரும் இவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன? இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினரும், இந்திய அடிமைகளும் இத்தாலிய கலப்பான ராகுலை பிரதமர் பதவிக்கு ஆதரவு தெரிவித்து கூப்பாடு போடுவதை பார்க்க ஏளனமாகத்தான் உள்ளது. இந்திய நலனுக்காக எவ்வித எள்ளளவும் செய்யாத ராகுல் மற்றும் பிரியங்கா – நமது தமிழ் இனத்திற்கு என்ன செய்து விட்டார்கள் அல்லது விடுவார்கள்? நேரு குடும்ப வாரிசுகள், காந்தியின் பெயரில் பின்னால் ஒளிந்து கொண்டு பரம்பரை பரம்பரையாக 6 தலைமுறை ஆட்சிக் கட்டிலில் 60 ஆண்டுகள் பதவி சுகம் அனுபவிக்க விட்டது போதும்.

மாறாக, நமது ரத்த உறவுகளான ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு இலங்கை ராசாபக்சே அரசிற்கு துணை போனவர்கள் – பின்னிருந்தது போரை நடத்தியவர்கள் தானே காங்கிரசை நடத்தி வரும் இத்தாலிய சோனியா குடும்ப துரோகிகள்! அரசியல் பதவிக்காக, ‘எங்களது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டோம்’ என்ற நாடகத்தை எதார்த்த தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதுபோல், இனப்படுகொலை செய்ய துணை நின்றவர்களை மன்னிக்கவும், மறக்கவும் தமிழர்கள் எல்லோரும் அரசியல் கட்சி நடத்தி பதவி வெறி பிடிப்பவர்கள் அல்லர்.

இப்படிப்பட்ட இனத்துரோகியான காங்கிரசிடம், தமிழர்களை அடகு வைத்து ஆட்சியை பிடிக்க தமிழகத்தில் உள்ள திராவிட சக்திகள் கூட்டு வைத்து கொண்டால், அதை தமிழக தமிழர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? சரி இங்குள்ள திராவிட சக்திகளும் தமிழர்களுக்கு பல வகைகளில் இதுவரை எதிரானவையாகத்தான் இருந்தது வந்ததுள்ளன. திராவிட சக்திகள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் கணக்கில் அடங்காமல் உள்ளன. இதற்கு தனியே நாம் எழுத வேண்டிய அவசியமில்லை.

இப்படியிருக்க தமிழ் மக்களை இலகுவாக கருதிக் கொண்டு, அறியா மக்கள் சக்தி, பணபலம், ஊடக வலிமை போன்றவற்றை தன்னகத்தே கொண்டு தனக்கு சாதகமான சூழலை உருவாக்க இங்குள்ள திராவிட சக்தி அணியினர் காங்கிரசோடு கூட்டு சேர்ந்து கொண்டு மீண்டும் தமிழ் இன மக்களை முட்டாளாக்க எத்தனிப்பது தெரிகிறது. இதற்கு எவ்வகையிலும் இனி தமிழர்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை வரும் தேர்தல் உணர்த்தும் என்பதில் மட்டும் யாருக்கும் ஐயமில்லை.

– அக்னி

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: