திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி!

திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் - மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி!

திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி!

திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் என்று மாண்புமிகு தமிழக ஆளுநர் டாக்டர் வித்யாசாகர் ராவ் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி அளித்தார்.

டாக்டர் வித்யாசாகர் ராவ் அவர்கள் தமிழகம் மட்டுமல்லாது, மகராஷ்ரா மாநில ஆளுநராகவும் தற்போது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உலகத் தமிழர் பேரவையில் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்களின் தலைமையில் இன்று (02-12-2016) மாலையில், மாண்புமிகு தமிழக ஆளுநர் டாக்டர் வித்யாசாகர் ராவ் அவர்களை சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நல்லெண்ண ரீதியிலான சிறப்பு சந்திப்பொன்று நிகழ்ந்தது.

Chola_dynasty_map_Tamil

அப்பொழுது, பெருங்கடல்களை தன்னுடைய ஆட்சியின் கொண்டு வந்த தமிழ் மன்னன் முதலாம் இராஜேந்திர சோழனுக்கு, சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள மகாகன் துறைமுக அலுவலகத்தில், மன்னனின் பெருமையை பறைசாற்றும் வகையில் புகைப்படங்களை திறந்து வைத்த மாண்புமிகு தமிழக ஆளுநர் டாக்டர் வித்யாசாகர் ராவ் அவர்களை உலகத் தமிழர் பேரவை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட தமிழக ஆளுநர், தமிழ் மன்னனின் பெருமைகளை நன்று கேட்டறிந்தார். முதலாம் இராஜேந்திர சோழனால் வெற்ற கடாரப் பகுதிகள் இன்றும் மலேசியாவில் கெடா மாநிலம் என அழைக்கப்படுகிறது என்பதும், மேலும் ஆய்வுகள் இதுகுறித்து தேவைப்படுகின்றன என சொல்லப்பட்ட போது, குறித்து கொண்டு, தன்னால் என்ன செய்ய இயலுமோ அவற்றை செய்வதாக உறுதியளித்தார்.

rajendra_cholan_portrait_tamilnadu-governor-Vidyasagar-Rao-2

அத்தோடு, திருவள்ளுவரின் பெருமைகளை அறிந்திருந்த தமிழக ஆளுநர், வள்ளுவருக்கு ஒரு மாபெரும் விழா எடுத்து ஆளுநர் மாளிகையில் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் அவரது சிலையை நிறுவுவேன் என வாக்குறுதியும் அளித்தது நம்மை நெகிழ செய்தது. அதுபோலவே, திருவள்ளுவரின் பெருமைகளை வடநாட்டவர் அறிந்து கொள்ளும்வண்ணம், பெரிய அளவிளான விழாவை வட இந்தியப்பபகுதிகளில் நடத்தப்பட வேண்டும், அதற்கு பல ஆயிரம் தமிழர்கள் கட்சிகளை கடந்து அங்கு சென்று கலந்து கொள்ள வேண்டும் எனவும் விருப்பத்தினை தெரிவித்தார். அவ்வாறு வட-இந்தியாவில் திருவள்ளுவருக்கு விழா எடுக்கப்பட்டால், அவ்விழாவில் தமிழர்கள் பெருமளவு பங்கு கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் உலகத் தமிழர் பேரவை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.

tn_governor_palace_02122016_2

முன்னதாக மாண்புமிகு தமிழக ஆளுநர் டாக்டர் வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு திருவள்ளுவர் சிலையொன்று உலகத் தமிழர் பேரவையின் நினைவு பரிசாக, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி வழங்கினார். அவருடன் பட்டய கணக்கர் திரு. கோபி நாராயணன் அவர்களும் உடன் சென்று சிறப்பித்தார்.

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

6 Responses

  1. Pingback: V.Thamizhmaraiyan

  2. Pingback: Mohanraj

  3. Pingback: Dr.P. R.Subas Chandran

    • Pingback: WTF

  4. Pingback: media master

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: