தமிழர் ஆய்வு மையத்தின் செல்வா பாண்டியன் விபத்தில் மறைந்தார்!

கோப்பு படத்தில் (இ-வ) செல்வா பாண்டியன், அதியமான் மற்றும் அக்னி

கோப்பு படத்தில் (இ-வ) செல்வா பாண்டியன், அதியமான் மற்றும் அக்னி

இன்று (21-03-2018) மாலை பெரம்பலூர் அருகே லாரியின் பின்புறம் கார் மோதியதில் திரு. செல்வா பண்டியன் மற்றும் திரு. சுரேஷ் பண்டியன் இறந்து போயினர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

செல்வா பண்டியன் முன்பு விஜய் தொலைக்காட்சியில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். பின்பு அவர் சார்ந்த பள்ளர் சமுகத்திற்காகவும், அத்தோடு தமிழ் தேசியத்திற்காகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வந்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


செல்வா பண்டியனின் கோவை-லிருந்த இல்லத்திற்கு சுமார் 4 வருடங்களுக்கு முன்பு அழைத்து சென்று உணவு உண்டோம். அது போலவே எனது சென்னை இல்லத்திற்கு வருகை புரிந்திருந்தார். இது தவிர பல்வேறு இடங்களில் சந்திப்புகள் நிகழ்த்தியுள்ளோம்.

சந்திப்புகளில் தமிழ் தேசியத்தை குறித்து ஆழமாக கருத்துகள் பரிமாறிக் கொள்வோம். பல சமயம் சமரசங்கள். முரண்கள். இணைந்த பயணங்கள் என நகர்த்தி வந்திருக்கிறோம்.

இவர் பிறந்து வளர்ந்தது தமிழகம் எனினும், பூர்வீகம் மியான்மார் என்பதால், அங்கு சென்று தமிழ் சமுகத்தை இணைத்து வந்தார். அதுபோல், மலேசியாவிற்கும் பயணம் மேற்கொண்டு வந்தார்.

இப்பொழுது, அவரது பிரிவு என்பது தமிழ் நீரோட்டத்திற்கு பின்னடைவே.

உலகத் தமிழர் பேரவை அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: