தமிழினத்திற்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு உலகத் தமிழர் பேரவையினர் அஞ்சலி!

தமிழினத்திற்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு உலகத் தமிழர் பேரவையினர் அஞ்சலி!

தமிழினத்திற்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு உலகத் தமிழர் பேரவையினர் அஞ்சலி!

உலகம் முழுக்க உள்ள தமிழ் இனம் சார்ந்தவர்கள் பல்வேறு சூழல்களில் தங்களின் இனத்தின் மேன்மைக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி தங்களது இன்னுயிரை கொடுத்துள்ளனர். அந்த மாபெரும் கொடையினை அளித்த மாவீரர்களுக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 27ம் நாள் மாவீரர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவையும் ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்களின் நினைவுப் போற்றும் வகையில் மெழுகுபத்தியேற்றி அவர்களின் வரலாறுகளை நினைவு கூறி வருகிறோம். அவ்வகையில் 2017ம் ஆண்டும் சென்னை அண்ணா சாலையில் உள்ள உலகத் தமிழர் பேரவை-யின் தலைமையாகத்தில் சிறப்பு விருந்தினர் முன்னிலையில் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழறிஞர் அரு.கோபாலன், திரைப்பட இயக்குநர் வீ.சேகர், ஆடிட்டர் கோபிநாராயண யாதவ், எழுத்தாளர் உதயை வீரையன், ஊடகவியலாளர் ஜூபிடர் ரவி, நீதியின் தீர்ப்பு புலனாய்வு மாத இதழின் ஆசிரியர் மு.ச. கிருஷ்ணவேணி, செய்தியாளர் கோட்டீஸ்வரன் மற்றும் உலகத் தமிழர் பேரவை -யின் தலைமையகப் பொறுப்பாளர் வாசுகி, ஆனந்தி ஆகியோர் பங்கு கொண்டு நிகழ்ச்சிக்கு மெருஹூட்டினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: