உலகத் தமிழர் பேரவை – யின் நிறுவனர் ஐயா முனைவர் இரா. சனார்த்தனம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல்!

ஐயா முனைவர் இரா. சனார்த்தனம் அவர்களைப் பற்றிய செய்தி தொகுப்பை மேலும் காண..

உலகத் தமிழர் பேரவை – யின் நிறுவனர் ஐயா முனைவர் இரா. சனார்த்தனம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (23-02-2020) சென்னை ஸ்மித் சாலையில் காலை இலக்கிய நட்புகள் சேர்ந்து நடத்தின.

ஐயா முனைவர் இரா. சனார்த்தனம் அவர்களின் நினைவுகளை பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் திரு. கோகுலன் கருணாகரன் அவர்களும், சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்குரைஞர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் அவர்களும், பொது நூலகத் துறையின் மேனாள் இயக்குனராக இருந்த திரு. ந. ஆவுடையப்பன் அவர்களும், நடிகர் திரு. சினிஜெயத் அவர்களும், திரு. சந்தர் அவர்களும், திரு. பிரபாகரபாபு அவர்களும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களும், திரு. முனிரத்தனம் அவர்களும், திரு. மாறன் அவர்களும், சென்னை பெருநகர காவல்துறையின் உதவி ஆணையர் திரு. தாம்சன் அவர்களும், திரு. உதயக்குமார் அவர்களும் பகிர்ந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: