மண்ணின் மைந்தருக்கே வேலை என்ற கோரிக்கை மாநாடு!

மண்ணின் மைந்தருக்கே வேலை என்ற கோரிக்கை மாநாடு!

தமிழ்நாட்டின் முகமே மாறி, இங்கே வேலை தேடியும் தொழில்களை செய்யவும் அன்றாடம் படையெடுப்பு போல தமிழ் நாட்டிற்குள் வருவோர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அதனால் இங்கு இருக்கும் தமிழர் பலருக்கும் வேலை வாய்ப்புகள் பறி போய்க் கொண்டிருக்கிறது. இதன் உணர்ந்த தமிழ்த் தன்னுரிமை இயக்கம் தமிழ் நாட்டு வேலை வாய்ப்புகளையும் தொழில் முதலாளித்துவத்தையும் இழந்திடாமல் காக்க சென்னை வடபழனியில் இருக்கும் நம்ம வீடு வசந்த பவனில் இருக்கும் உள்ளரங்கில்.. தமிழ்நாடு தமிழருக்கே! என மொழிந்த சோமசுந்தர பாரதி அரங்கில் மாநாடு ஒன்றினை சிறப்பாக நடத்தியது.

இதற்கு தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் தலைமையேற்க கவிஞர் தென்பாண்டியன் வரவேற்புரையாற்றி வரவேற்றார்.

இதில், மக்கள் தேசிய கட்சியின் தலைவர் சேம நாராயணன் கலந்து கொண்டு மாநாட்டுத் தீர்மானங்களை வெளியிட தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் வழ. சக்திவேல் பெற்றுக்கொண்டு வெளியிட்டு பேசினார்.

தமிழ்நாடு சோசலிஸ்டு கட்சித் தலைவர் தஞ்சை இளஞ்சிங்கம், அகில இந்திய மக்கள் நலப் பேரவை தலைவர் ஆ என்றி, வணிகர் சங்க பேரவை தலைவர் அ முத்துக்குமார், வழ. குடவாசல் சிவசங்கரன், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்பிரமணியம், வழ. த தனசேகர், க. அதியமான், அயனாவரம் பாபு, வே க சந்திரமோகன், அ. வியனரசு, தமிழா தமிழா பாண்டியன், சிட்டிபாபு ராசு என பலரும் கருத்துரை வழங்கினர்.

தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து வளங்களும் வேலை வாய்ப்புகளும் தமிழருக்கே உரிமையானது என தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் சார்பில் கடந்த வியாழக்கிழமை (05.12.2019) அன்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டுத் தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நன்றியுரையை தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் பண்பாட்டு செயலாளர் அ.சித்தர் ஆற்ற மாநாடு நிறைவடைந்தது. திராளான தமிழ்தேசிய சிந்தனையாளர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: