ஹார்வர்டைத் தொடர்ந்து ஆக்ஸ்ஃபோர்டு! – தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சியில் உலகத் தமிழர்கள்!

ஹார்வர்டைத் தொடர்ந்து ஆக்ஸ்ஃபோர்டு! - தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சியில் உலகத் தமிழர்கள்!

ஹார்வர்டைத் தொடர்ந்து ஆக்ஸ்ஃபோர்டு! – தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சியில் உலகத் தமிழர்கள்!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைப் போல, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் உலகத் தமிழர்கள்.

‘ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி, தமிழ் இருக்கையை அமைப்பதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்த வேண்டும்’ எனப், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள உலகத் தமிழ் அமைப்பு சார்பில் நேற்று, செயின்ட் ஜேம்ஸ் ஹோட்டலில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதற்கு முன்னதாக, ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு அதிக நிதி அளித்த மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தன் ஆகியோருக்கு சாதனையாளர் விருதை வழங்கிக் கௌரவித்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். அதன் பிறகு நடந்த உலகத் தமிழ் அமைப்பு கூட்டத்தில், ‘ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு எடுக்கப்பட்ட முயற்சிகளைப்போல, ஆக்ஸ்ஃபோர்டிலும் தமிழ் இருக்கை கொண்டு வர வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இதைத் தொடர்ந்து பேசிய, ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன், `ஐரோப்பாவில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைய வேண்டும் என்பதற்காக 12,000 பவுண்டுகள் நன்கொடையாக வழங்கி, தொடங்கி வைத்திருக்கிறார் ஜேக்கப் ரவிபாலன். இது தொடர்பாக, மேலும் பலரிடம் நன்கொடை பெறப்படும். மிக விரைவில் ஆக்ஸ்ஃபோர்டில் தமிழ் இருக்கை அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராகப் பணியாற்றிவரும் கிரிஸ்டோபரிடம், தமிழ் இருக்கை தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் தமிழ் அறக்கட்டளை அமைந்ததைப்போல, ஐரோப்பாவிலும் தமிழ் அறக்கட்டளை அமைக்கப்படுவதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. தமிழ் இருக்கைக்காகக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக தமிழ் இருக்கை அமைப்பதற்காக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தீவிரமாக விவாதிக்க வேண்டியுள்ளது. பல்கலைக்கழகம் வகுத்துள்ள விதிமுறைகளை ஆராய்ந்து, தேவைப்படும் நிதி பற்றி விவரங்களைத் தெரிந்துகொள்ளவும், அதன்பிறகு நிதியைத் திரட்ட முடிவுசெய்ய இருக்கிறோம். எனவே, இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகக் கருத வேண்டும். இங்கு கூடியிருக்கும் தமிழர்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது, ஆக்ஸ்ஃபோர்டில் நிச்சயமாகத் தமிழ் இருக்கை அமையும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது’ என்றார் நெகிழ்ச்சியோடு. இந்த நிகழ்ச்சியில், பிரிட்டனில் வாழும் தமிழ்த் தொழிலதிபர்கள், பிரிட்டன் அரசியல் பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: