சுவிஸ் தமிழர் கொரோனா தொற்று நோய் தாக்கி மரணம்!

சுவிஸில் கடந்த வாரம் 59 வயதான திரு.சதாசிவம் லோகநாதன் கொரோனா தொற்று நோய் தாக்கி இறந்த முதல் சுவிஸ் தமிழராவார்.

“என்னுடைய சகோதரர் ஒரு நல்ல மனிதன்!” என்கிறார் மரணமடைந்த சதாசிவத்தின் சகோதரர் திரு. சிவலிங்கம்.

“உயிரிழப்பின் காரணம் கொறோனா என்னும் தொற்றுநோய்” என்று செங்கால்லன் மாநிலத்தின் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவிக்கிறது.

நீரிழிவு நோயின் கடுமையான நோயாளியாக மரணமடைந்த சதாசிவம் இருந்த போதும் இவரை இறுதி வரை வீட்டில் இருக்குமாறு இவருடைய குடும்ப மருத்துவர் கூறியிருந்தார். “ஏன் என்னுடைய சகோதரத்தை அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை?” எனக் கேட்கின்றார் சிவலிங்கம். அவரது கேள்வியும் சரிதான் என ரெலே சூரிச் என்ற செய்தித்தளம் சொல்கிறது.

“மருத்துவமனையில் இடங்கள் நெருக்கடியாக இருப்பதும், குறைவான அறிகுறிகள் இருப்பவர்களின் நிலை மோசமாக மாறும் பொழுதே அவர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் ஏன் இந்த நோயாளியை மருத்துவமனைக்கு அனுப்பவில்லை என்பது தெரியவில்லை. இது ஒரு கடினமான முடிவு. ” என்கிறார் லிந்தால் மருத்துவ மையத்தின் முதல்வர் கொல்கெர் கேர்ஷ். யார் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது, யார் சேர்க்கப்படவில்லை என்பதை றாப்பர்ஸ்வில் மருத்துவ ஆலோசனை மையத்தில் தான் கேட்க முடியும்.

“ஆனால் இப்படி ஓர் மோசமான நிலை தான் லோகநாதன் என்ற நோயாளிக்கு தரப்பட்டது, என அடுத்த வீட்டில் வசிப்பவர் கூறுகின்றார். சாதாரணமான இருமல் அல்ல, கடுமையான இருமல் இருக்கின்றது என நான் குடும்ப மருத்துவரிடம் கூறினேன். தான் ஒரு இருமலுக்கு மருந்து தருவதாக மட்டுமே மருத்துவர் கூறினார்.” என்று சொன்னார், அடுத்த வீட்டில் வசித்தவரானரும், தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு வரும் எல்பெட் திவ்யகாந்.

கொறோனா நோயாளிக்கு இருமல் மருந்து கொடுக்கப்பட்டிருப்பதை குடும்ப மருத்துவரிடம் கேட்ட போது, அவர் எந்த வித எதிர் பதிலையும் அளிக்க விரும்பவில்லை. மேலும் இது தொடர்பாக அவர்கள் எதையும் கூறவும் விரும்பவில்லை.

உதவி : ர.நிதுர்ஷனா
Source: Tele Züri

அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: