தொழில் போட்டி காரணமாக, சுவிஸில் தமிழ் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி !!

பலியான கார்த்திக்!

பலியான கார்த்திக்!

வெண்பனி தேசமென செல்லமாக அழைக்கப்படும் சுவிட்சலாந்து நாட்டின் சொலத்துாண் மாநிலத்தில் ரயில் நிலையத்தின் கீழ்த் தளத்தில் உள்ள தமிழர் ஒருவருக்குச் சொந்தமான கடையில் தொழில் ரீதியில் நண்பர்களாக இருந்த இருவரிடம் ஏற்பட்ட தகராறு நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சூட்டில் முடிந்து, ஒருவர் பலியானார்.

சொலத்தூண் மாநகரில் பிரபலமான சோலோ மூவி உரிமையாளர் வசி என்பவராலேயே துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சோலோ மூவியில் சில ஆண்டுகளுக்கு முன் வேலை செய்து தற்சமயம் தனியாக தொழில் புரியும் நீதன் என்பவருடன் நீண்ட நாட்களாக சண்டை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே சோலோ மூவியில் வேலை செய்து தற்சமயம் நீதனுடன் வேலை செய்யும் தஜி அவர்களும் தங்களின் வியாபார நிலையத்தின் சிறப்பு விலைக்கழிவு துண்டு அறிக்கை விநியோகம் செய்வதற்காக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர்களுக்கு எதிர் புறமாக இருந்த “இனியா” என்ற உணவகத்திலிருந்து வந்த வசி என்பவரோடு வாய்த் தகராறு ஏற்பட்டு, இந்த இடத்தில் (சொலத்துாண்) நீங்கள் விலைக்கழிவு போடமுடியாது என தொடங்கி கைகலப்பு வரை சென்றுள்ளது.

இதனை தடுக்க முற்பட்ட அங்கிருந்த வேறு ஒரு இளையோருடனும் தகராறு செய்து விட்டு வசி சென்றுள்ளார். அதே இடத்தில் மேல் தளத்தில் அவருக்கு சொந்தமான கடை இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சுமார் ஐந்து நிமிடம் கழித்து வந்த வசி, அங்கிருந்தவர்களை நோக்கி வந்து, தனது இடுப்பில் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளார்.

இந்த துப்பாகி சூட்டில், வவுனியா நொச்சிமோட்டையை சொந்த இடமாக கொண்ட கார்த்திக் (வயது 29) என்பவருக்கு கழுத்து பகுதியில் சுடப்பட்டு அங்கேயே கீழே சரிந்து விழுந்த பின்னர், அவரின் தலையில் துப்பாக்கியை வைத்து சுட்ட போதும், அங்கு தடுக்க முற்பட்ட தஜியையும் நோக்கியும் சுடத்தொடங்கியுள்ளார். இதில் அதிஷ்டவசமாக தஜி மீது குண்டு பாயவில்லை. அதைத்தொடர்ந்து அங்குள்ள இளைஞர்கள் மீதும் வெறித்தனமாக சுட்டுள்ளார்.

கடைக்குள் நுழைந்து நீதனுக்கு நேராக துப்பாக்கியை நீட்டி சுட முற்பட்டபோது துப்பாக்கியில் ரவைகள் தீர்ந்தமையால் இவரும் அதிஷ்டவசமாக நீதனும் உயிர் தப்பினார். வெறி அடங்காமல், அங்கிருந்த கடையை அடித்து சேதப்படுத்திவிட்டு, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே தப்பியோடி தலை மறைவாகி விடடார்.

பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கார்த்தி ( புதன் கிழமை ) உயிரிழந்துள்ளார்.

அதேவேளை தலைமறைவான குற்றவாளி சோலோ வசி கைத்துப்பாக்கியுடன் காவல்துறையிடம் சரணடைந்துள்ளதாகவும், சம்மந்தப்பட்டவரிடம் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும், இதில் மேலதிக விபரங்கள் விரைவில் வெளி வரும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


உலகத் தமிழர் பேரவை – யில் உறுப்பினராக…. இங்கே அழுத்தவும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: