தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் கைது!

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரச படையினரை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் Duesseldorf பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட பி.சிவதீபன் என்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் நேற்று, நீதிக்கான சமஷ்டி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இதன்போது, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தும் வாய்ப்பு இருப்பதன் அடிப்படையில்–ஜெர்மனியின் தனியுரிமை சட்டத்தின் கீழ், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போர்க்குற்றம் இழைத்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், வெளிநாட்டு தீவிரவாத அமைப்பில் அங்கம் வகித்தார் என்ற அடிப்படையிலுமே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2006-ம் ஆண்டு தொடக்கம், 2009-ம் ஆண்டு வரை இவர் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்தார் என்று ஜேர்மனியின்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், 2008-ம் ஆண்டு, விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த 16 சிறிலங்கா படையினரை கட்டி வைத்து, அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்படுவதற்கு பாதுகாப்பு அளித்தார் என்றும், கைதிகளாக இருந்த படையினர் கொல்லப்படும் இடத்தில் இருந்தார் என்றும் சிவதீபன் மீது ஜேர்மனியின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

இதுவரை அறிந்திராத `ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: ... இதுவரை அறிந்திராத `ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம்! உலகறிந்த மொழிகளில் உள்ள நூல்களை எல்லாம் தன்னகத்தே கொண...
தமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் நட... தமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் நடந்த பாராட்டு விழா! தமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரில் அமைந்திருக...
போர்க் குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை இராணுவத்தை தண்... போர்க் குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை இராணுவத்தை தண்டிக்க எமது அரசு ஏற்காது! - உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபகஷ! இனவாதம் மலிந்த நாட்டி...
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற, முதலாவது ஈழத்தமிழனின... இரண்டாம் உலக போரில் பங்கேற்ற, முதலாவது ஈழத்தமிழனின் 102 பிறந்ததினம் (27.01.2018)! இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 102 ஆவது பிறந்...
Tags: 
%d bloggers like this: