மற்றுமொரு லண்டன் தமிழ் மருத்துவர் கொரோனாவிற்கு பலி!

லண்டன் மிட்லேண்டில் பணியாற்றி வந்த மருத்துவர் விஷ்ணு ராசையா (வயது – 48) என்ற இளம் தமிழ் மருத்துவரே இன்று (24-04-2020) கொரோனா தாக்கி பலியானார்.

மருத்துவர் விஷ்ணு ராசையாவின் குடும்பத்தினர் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். அவர் என்.ஹச்.எஸ். பவுணுடேசன் டிரஸ்டின் பக்கிங்காம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவத்தை கவனித்து வந்துள்ளார். பொதுவாக நோயுற்று வரும் குழந்தைகளையும் அவர்களது குடும்பத்தினரையும் மிகுந்த அக்கரையோடு கவனித்துக் கொள்வது இவரது பண்பு. இவரைப்பற்றி அவரது மனைவி லிசா மருத்துவரைப் பற்றி கூறும்போது, அவர் ஒரு நல்ல அப்பாவாகவும், நல்ல கணவராகவும் இருந்தார் என்றார். மருத்துவர் விஷ்ணு ராசையாவிற்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

லண்டன் மிட்லேண்டில் மட்டும் 13 என்.ஹச்.எஸ். பணியாளர்கள் கொரோனா தொற்றிற்கு பலியாகியுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

லண்டனில் தமிழ் மருத்துவர்கள் இதுவரை இருவரை கொரோனாவிற்காக இழந்துள்ளது மனதை வருத்துகிறது. லண்டனில் கொரோனா தொற்றிற்கு இறந்த முதல் மருத்துவர் ஆன்டன் செபாஸ்டின் பிள்ளை என்பதை நினைவில் கொள்க.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com
#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: