மால்டா நாட்டில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சென்னை மாணவர் சாதனை!

மால்டா நாட்டில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சென்னை மாணவர் சாதனை!

மால்டா நாட்டில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சென்னை மாணவர் சாதனை!

மால்டா நாட்டில் நடந்த, சர்வதேச தடகள போட்டியில், சென்னையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர், இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

ஐரோப்பாவில் உள்ள மால்டா நாட்டில், ‘கார்பெரேட்’ விளையாட்டு அமைப்பு சார்பில், 39வது, ‘வேர்ல்டு மெடிக்கல் ஹெல்த் கேம்’ என்ற, சர்வதேச அளவிலான, பல்வேறு விளையாட்டு போட்டிகள், ஜூன், 16ல் துவங்கி, நேற்று நிறைவடைந்தன. அதில், தடகளம், நீச்சல், ஜூடோ, பளு துாக்குதல், கத்தி சண்டை, சதுரங்கம் என, 20க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியா, நைஜீரியா என, மொத்தம், 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, ஏராளமான, வீரர் – வீராங்கனையர் பங்கேற்றனர்.

தடகள போட்டியில் மட்டும், பல்வேறு நாடுகளை சேர்ந்த, 3,500 வீரர்கள் பங்கேற்றனர். சென்னை, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லுாரி மாணவர், இனக் நியூட்டன் ஜோசப், 19, இந்தியா சார்பில், 100 மற்றும், 200 மீட்டர் போட்டியில் பங்கேற்றார். நியூட்டன் ஜோசப், 100 மீ., துாரத்தை, 11:24 நொடியிலும்; 200 மீ., துாரத்தை, 22:89 நொடிகளிலும் கடந்து, முதலிடத்தை பிடித்து, இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். ஐரோப்பா அளவில் நடந்த போட்டிகளில், முதல் முறையாக, தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பங்கேற்று, வெற்றி பெற்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்து உள்ளார். மேலும், ஐரோப்பா அளவில் நடந்த போட்டியில், இந்திய வீரர் வெற்றி பெற்றது, இதுவே முதல்முறை.

மால்டா நாட்டில் நடந்த சர்வதேச போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும், தங்கள் நாட்டின் அரசு உதவியுடன்தான் பங்கேற்றனர். ஆனால் ஜோசப்பிற்கு, மத்திய, மாநில அரசுகள் எந்த உதவியும் செய்யவில்லை. அவரின் பயிற்சியாளரின் உதவியுடன் தான் ஜோசப், மால்டா சென்று, போட்டியில் பங்கேற்றார்.

இது குறித்து இனக் நியூட்டன் ஜோசப் கூறியதாவது: நான்கு ஆண்டுகளாக, தடகள விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறேன். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று இருக்கிறேன். சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்றது, இதுவே முதல் முறை. அதில், இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்றது, பெருமையாக இருக்கிறது. என் பெற்றோர் மற்றும் தலைமை பயிற்சியாளர், விஜயபாபு ஆகியோரின் ஊக்கம் தான், வெற்றிக்கு காரணம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: