விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

விடுதலைப் புலிகள் திரும்பி வர வேண்டும் என்று ஆவேசமாகப் பேசிய இலங்கையின் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அரசில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர் விஜயகலா மகேஸ்வரன்(வயது45). இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில், குழந்தைகள் நலவிவகாரத் துறை அமைச்சராக இருந்தார்.

கடந்த ஜூன் மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதிக்கு முன்பாக நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியது இருக்கிறது. இப்போது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இன்றைய சூழலில், வடக்கு மாநிலத்தில் மீண்டும் விடுதலைப் புலிகள் வர வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் விருப்பமாக உள்ளது. நாம் வாழ விரும்பினால், சுதந்திரமாக நடமாட வேண்டும். நம்முடைய குழந்தைகள் சுதந்திராக பள்ளிக்குச் சென்று, உயிருடன் மீண்டும் வீட்டுக்கு திரும்ப வேண்டும். ஆனால், வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது” என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பேசிய விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. விஜயகலா பேசியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின.

இதையடுத்து, விஜயகலா மீது விசாரணை நடத்த ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. மேலும், விஜயகலா மகேஸ்வரனும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

விசாரணைக் குழு அளித்த அறிக்கையில் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விஜயகலா மகேஸ்வரன் கருத்துத் தெரிவித்துள்ளார் எனத் தெரிவித்து இவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது எனத் தெரிவித்தது.

இதையடுத்து, விஜயகலா மகேஸ்வரனுக்கு காவல் துறையினர் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகக் கூறினார்கள். இன்று காலை காவல் துறையினர் விசாரணைக்கு வந்த விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணை நடத்தியபின் காவலர்கள் அவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட விஜயகலா மகேஸ்வரன் 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரை கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: