அடுத்த தமிழின துரோகி : ராஜபக்சேவை ஆதரித்து அமைச்சரான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சதாசிவம் வியாழேந்திரன்!

அடுத்த தமிழின துரோகி : ராஜபக்சேவை ஆதரித்து அமைச்சரான தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி சதாசிவம் வியாழேந்திரன்!

அடுத்த தமிழின துரோகி : ராஜபக்சேவை ஆதரித்து அமைச்சரான தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி சதாசிவம் வியாழேந்திரன்!

இலங்கையின் தற்போதைய பரபரப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி ஒருவரை திடீர் பிரதமர் மகிந்த ராஜபக்சே தரப்பு, தங்கள் பக்கம் வளைத்துவிட்டது. அவருக்கு அமைச்சர் பதவியையும் அளித்துள்ளது.

ரணிலின் ஆட்சி தொடர்ந்தாலும், ராஜபக்சேவின் ஆட்சியில் அமர வேண்டுமானாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு முக்கியமாக உள்ளது. ரணில் விக்கிரமசிங்கேவும், ராஜபக்சேவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம், ஆதரவு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என அவைத்தலைவர் கரு ஜயசூர்யா தலைமையில் கூட்டமைப்பு உட்பட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இன்று நேரில் வலியுறுத்தினர்.

திடீரென மாலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. வியாழேந்திரன், அமைச்சராகப் பதவியேற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு இலங்கை மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில், கூட்டமைப்பின் சார்பில் ப்ளாட் கட்சியைச் சேர்ந்த இவர் போட்டியிட்டார். கிழக்கு மாகாண மேம்பாட்டுத் துறை அமைச்சராக மைத்திரியால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

இரு பிரதமர்களை கொண்ட கோமாளி நாடாகிறதா இலங்கை? பிரத... இரு பிரதமர்களை கொண்ட கோமாளி நாடாகிறதா இலங்கை? பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்கே மறுப்பு! இலங்கை பிரதமராக தான் நீடிப்பதாக இலங்கை பிரதமர்...
இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்... இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்குவதாக அதிபர் மைத்ரிபாலா சிரிசேனா அறிவிப்பு! இலங்கை பிரதமராக ராஜபக்சேவை பதவியில் அமர்த்திய அதிபர் ...
இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் – இலங்கை ப... இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே, பிரதமரானார்! இலங்கை பிரதமராக ...
சிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்... சிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்தியர் கைது! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ...
Tags: