தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

400 ஆண்டுகள் பழமையான புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கான 100 அடி நீளமான அன்னதான மடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தீவிலே வவுனியாவில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயம் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த ஒரு கோயிலாகும். வடமாகாணத்தில் உள்ள பல நாகதம்பிரான் ஆலயங்கள் நாகர் காலத்தில் இருந்தே இருந்து வருகின்றன. நாகர்கள் தமிழர்கள் என்று பேராசிரியர் பத்மநாதன் கூறியிருக்கின்றார். ஆகவே நாகதம்பிரான் வழிபாடு இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய வழிபாடு என்று கூறமுடியும். இலங்கைத் தீவின் பூர்வீக குடிகளாக இனங்காணப்பட்ட தமிழர்களின் புராதன வரலாறுகள் முறையாக பேனப்படாமையால் இன்று எமது புராதன வரலாறுகள் மாற்றி எழுதப்படுவதுடன், வேண்டுமென்றே அழிக்கப்படுகின்றன.

வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். எமது ஆவணங்கள் பேணி பாதுகாக்க முடியாதவிடத்து கடல் கடந்த நாடுகளில் பேணக்கூடிய ஆவண காப்பகத்தில் பேணி பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இந்துக்களின் புராதன ஆலயங்களும், பல புராணக்கதைகளை கொண்ட ஆலயங்களும் அழிக்கப்பட்டு அல்லது உருச்சிதைக்கப்பட்டு அவ்விடத்தில் இந்துக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தெரியாதவகையில் உருமறைப்பு செய்யப்ட்டுள்ளன. இவ்வாறான கபட நோக்கம் கொண்ட நிகழ்வுகளில் இருந்து எமது ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

சாட்சி இல்லாப் போரில் அப்பாவி மக்கள் கொலை- வடக்கு ... சாட்சி இல்லாப் போரில் அப்பாவி மக்கள் கொலை- வடக்கு முதல்வரின் உருக்கமான உரை! என்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த...
கமுக்க முறுகல்கள் தொடரும்பட்சத்தில், வடக்கு மாகாண ... கமுக்க முறுகல்கள் தொடரும்பட்சத்தில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் பதவி விலகினார்! வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அன்மை...
வடமாகாண ஆளுநர் முன்னிலையில் இரண்டு புதிய அமைச்சர்க... வடமாகாண ஆளுநர் முன்னிலையில் இரண்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! வடமாகாண சபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக திரு. சர்வேஸ்வரனும் சமூக ச...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை மு... முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிக...
Tags: 
%d bloggers like this: