இலங்கையில் அமைச்சர்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரச் சந்திப்பு!

இலங்கையில் அமைச்சர்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரச் சந்திப்பு!

இலங்கையில் அமைச்சர்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரச் சந்திப்பு!

இலங்கையில் பிரதமரும், அமைச்சர்களும் தமது பதவிகளை வகிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சகல அமைச்சுகளின் செயலாளர்களையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அவசரமாகச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அமைவாக, பொதுச் சேவைகளை எந்தவித தடைகளுமின்றி , தொடர்ச்சியாக நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆலோசனைகளையும், கட்டளைகளையும் சகல அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச பாதுகாப்பினைப் போன்றே, நாட்டுக்கும் பொதுமக்களுக்குமான தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் குறைவின்றி நிறைவேற்றுமாறும், அனைத்து அரச சேவையாளர்கள், முப்படையினர் மற்றும் காவல் துறையினருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமரும், அமைச்சர்களும் தமது பதவிகளை வகிப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 12 ஆம் தேதி வரை, இடைக்காலத் தடையுத்தரவொன்றினைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை இன்று வழங்கியமையினை அடுத்து, அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக, மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: