இலங்கை குண்டு வெடிப்பு: 6 இடங்களில் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்கள்!

இலங்கை குண்டு வெடிப்பு: 6 இடங்களில் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்கள்!

இலங்கை குண்டு வெடிப்பு: 6 இடங்களில் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்கள்!

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு, உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. இதில், 5 பேர் இந்தியர்கள் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதிசெய்துள்ளார். மேலும், 500 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். வெடிகுண்டுத் தாக்குதலில் 33 வெளிநாட்டினர் பலியாகியிருக்கின்றனர். அதில், 12 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆனால் அது தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் அவர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக காவல் துறையினர் குறிப்பிடுகின்றனர். அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நகரில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு காலையில் ரத்துசெய்யப்பட்டது. மூன்று ஆலயங்கள் உள்ளிட்ட மொத்தம் 8 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. இதில், இரண்டு இடங்களில் மனிதவெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காலை 8.45 மணிக்கு தொடங்கிய குண்டுவெடிப்பு, 9.05 வரை நடந்துள்ளது. 20 நிமிடங்களுக்குள் 6 இடங்களிலும், அடுத்த 2 மணி நேரம் கழித்து மீதி இரண்டு இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், வரலாற்றுப் பெருமை வாய்ந்தது. குண்டுகள் வெடித்துச் சிதறியதில், ஆலயத்தில் மேற்கூரைகள்கூட சிதறின. வட கொழும்பில் உள்ள கட்டுவாபட்டியா புனித செபஸ்தியான் ஆலயத்தில் நடந்தது, மனித வெடிகுண்டுத் தாக்குதல் என்று சொல்லப்படுகிறது. கொழும்பில் உள்ள வீடு ஒன்றில் சோதனையிட்ட 3 போலீஸ் அதிகாரிகளும் குண்டு வெடித்துப் பலியாகியுள்ளனர்.

இலங்கையில் உள்ள 2.1 கோடி மக்கள் தொகையில், 7.6 சதவிகிதத்தினர் மட்டுமே கிறிஸ்தவர்கள். 70 சதவிகிதத்தினர் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள். 12.2 சதவிகிதத்தினர் இந்துக்கள். இஸ்லாமியர்கள் 9.7 சதவிகிதத்தினர் வாழ்கிறார்கள். புத்த மதத்தினர், கிறிஸ்தவ மதத்தினருடனும் இஸ்லாமிய மக்கள் மீதும் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தனர். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வார்களே தவிர, வெடிகுண்டு வைக்கும் அளவுக்கு வன்மம் இருந்ததில்லை.

கொழும்பு நகரில் இருந்து மறுகரையில் உள்ள மட்டக்களப்பு சியோன் ஆலயத்தில், தமிழ் பூசையின்போதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், இனங்களைத் தாண்டி மதரீதியான பயங்கரவாதமாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தாக்குதலுக்கு, வெளிநாட்டுத் தொடர்பு இருப்பதாகவும் இலங்கை சொல்கிறது. 10 நாள்களுக்கு முன்பாகவே இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் இலங்கையின் முக்கிய தேவாலயங்கள்மீது தாக்குதல் நடத்தவிருப்பதாக, போலீஸ் துறை தலைவர் புஜத் ஜெயசுந்தராவுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகவும், தகவல் கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அசோசியேட் பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் 6 தாக்குதல்கள் தற்கொலைகுண்டு தாக்குதல்கள் என காவல் துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவலர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல்கள் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை அதிபர் சிறிசேன அமைத்துள்ளார்.

இன்று இரவு 8 மணியிலிருந்து நாளை காலை 4 மணி வரை காவல் துறையினரால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் மேலும் பல தாக்குதல்களை நடத்துவதற்கு தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டு வருகின்றன” என்று இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அரசு விடுத்துள்ள அந்த எச்சரிக்கை குறிப்பில், “தீவிரவாதிகள் சிறிது அல்லது எவ்வித எச்சரிக்கையுமின்றி சுற்றுலா தலங்கள், போக்குவரத்து நிலையங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சகத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கையில், தாக்குதல்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் தெளிவூட்டப்பட்ட ஆவணமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இதன்படி, தற்கொலை குண்டு தாக்குதல், துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்துதல், கத்தியை பயன்படுத்தி தாக்குதல் நடத்துதல், வாகனத்தின் ஊடாக தாக்குதல் நடத்துதல் போன்ற தாக்குதல் விதங்கள் தேசிய புலனாய்வு பிரிவினரால் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்திலேயே கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர் ஆணையம் ஆகியன இலக்கு வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதுளை – தியதலாவை பகுதியில் நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது, வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

Tags: