கமுக்க முறுகல்கள் தொடரும்பட்சத்தில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் பதவி விலகினார்!

கமுக்க முறுகல்கள் தொடரும்பட்சத்தில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் பதவி விலகினார்!

கமுக்க முறுகல்கள் தொடரும்பட்சத்தில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் பதவி விலகினார்!

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அன்மையில் சில தினங்களுக்கு முன் பதவி விலகினார். அரசியல் உள்நோக்கத்துடனேயே அமைச்சரவையிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ளார் என்பதைத் தன்னால் புரிந்து கொள்ள முடிவதால் அவருக்குக் கீழ் ஓர் அமைச்சராக இருக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

‘‘கட்சியின் தீர்மானத்துக்கு கட்டுப்பட்டு எனது பதவியிலிருந்து விலகுகின்றேன்’’ என்று தெரிவித்து வடக்கு மாகாண முதலமைச்சருக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

கமுக்க முறுகல்கள் தொடரும்பட்சத்தில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் பதவி விலகினார்!

கமுக்க முறுகல்கள் தொடரும்பட்சத்தில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் பதவி விலகினார்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது. மாற்றியமைக்கப்படும் வடக்கு அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்று அதில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார். அதில் அவர் தெரிவித்ததாவது:

கமுக்க முறுகல்கள் தொடரும்பட்சத்தில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் பதவி விலகினார்!

கமுக்க முறுகல்கள் தொடரும்பட்சத்தில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் பதவி விலகினார்!

அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழு தனது இறுதி அறிக்கையில் என்னை விடுவித்திருந்ததுடன், எனது அமைச்சின் செயற்திட்டங்களுக்கு மாகாணசபை முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தது. ஆனால் என் மீது மீள்விசாரணை நடத்தப்படும் என்றும் கட்டாய விடுப்பில் செல்லுமாறும் கூறியிருந்தீர்கள்.

மீள அமைக்கப்படும் விசாரணைக்குழு நீதியானதாகவும், சட்டரீதியானதாகவும் இருந்தால் நான் மீண்டும் விசாரணைக்குத் தயாராக இருந்தேன். கடந்த 5ஆம் தேதி தங்கள் அலுவலகத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் நடந்த சந்திப்பில், அமைச்சரவையிலிருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். அதில் நீங்கள் பிடிவாதமாக இருந்துள்ளீர்கள்.

அமைச்சர் சபையிலிருந்து என்னை வெளியேற்றுவதில் நீங்கள் கொண்டிருந்த உறுதியான நிலைப்பாடானது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை என்னால் புரியக்கூடியதாக இருந்தது. இவ்வாறான நிலையில் தங்களுடன் இணைந்து தொடர்ந்தும் கடமையாற்றுவது சிந்திக்க வேண்டிய விடயமாக இருந்தது. இதன் பின்பு, தமிழ் அரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் கூடிப் பேசியபோது, மாற்றியமைக்கப்படும் அமைச்சரவையில் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் இருப்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. இவற்றுக்கு அமைவாகவே எனது பதவி விலகல் கடிதத்தை தங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

தமிழரசு கட்சிக்கும், வட மாகாண முதல்வருக்கும் கமுக்கமான முறுகல்கள் இன்னும் நீடிப்பதையே இது காட்டுகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: