கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய மக்கள்!

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய மக்கள்!

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய மக்கள்!

ஈழத் தமிழர் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாளான நவம்பர் 27 ம் நாளன்று, கிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

ஈழத் தமிழர் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணம் முழுவதும் மாவீரர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் துயிலும் இல்லங்கள் இருந்த இடங்களிலும் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சியில், கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாலையில் பெருந்திரளான மக்கள் திரண்டனர். விடுதலைப் புலிகள் இயக்கம் துப்பாக்கியை மௌனிக்கும் முன்னர் வரை, ஆண்டுதோறும் மாலை 5.45 மணிக்கு அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன், மாவீரர் உரையாற்றுவார். அதையடுத்து, அவ்வியக்கத்தின் முதல் மாவீரரான சங்கர் உயிர்நீத்த (நவ.27 மாலை 6.05 மணி) நேரத்துக்கு, ஓர் இடத்தில் பிரபாகரன் சுடரை ஏற்றுவார். அதையடுத்து, அனைத்து துயிலும் இல்லங்களிலும் திரண்டிருப்பவர்கள் தமக்கு முன்னே அமைக்கப்பட்டுள்ள சுடரை ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

அந்த மரபின் தொடர்ச்சியாக, துயிலும் இல்லங்களில் மாவீரர்களின் பெற்றோர் ஒருவர், மாலை 6.05 மணிக்கு முதன்மைச் சுடரை ஏற்ற, தொடர்ந்து, அங்கு வந்துள்ள பெற்றோரும் உறவினர்களும் அவரவர்க்கு முன்னர் உள்ள சுடரை ஏற்றுவார்கள். இந்தச் சமயத்தில், ‘சாவைத் தழுவிய சந்தனப் பேழைகளே..’ எனும் துயிலும் இல்லப் பாடல் ஒலிபரப்பப்படும்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லத்தில், பிரிகேடியர் தீபனின் தந்தை வேலாயுதம், முதன்மைச் சுடரை ஏற்றினார். தொடர்ச்சியாக, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான வன்னி மக்கள், மாவீரர் ஆன போராளிகளுக்கு சுடர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதைப் போலவே, யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், வடமராட்சி உடுத்துறை துயிலும் இல்லம், மன்னார் ஆட்காட்டிவெளி துயிலும் இல்லம், பண்டிவிரிச்சான் துயிலும் இல்லம், களிக்காடு துயிலும் இல்லம், வல்வெட்டித்துறை தீருவில் திடல், முல்லைத்தீவு விசுவமடு துயிலும் இல்லம், மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி துயிலும் இல்லம், அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லம் என மாலையில் முன்னர் அறிவிக்கப்பட்டபடி மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: