இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவி! சிறிசேனா திடீர் முடிவு!

இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவி! சிறிசேனா திடீர் முடிவு!

இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவி! சிறிசேனா திடீர் முடிவு!

இலங்கையில் அதிபராக இருந்த ரனில் விக்ரம சிங்கேவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திடீரென நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் ஆக்கினார்.

இதை ஏற்க ரனில் விக்ரம சிங்கே மறுத்து விட்டார். சபாநாயகர் கரு.ஜெய் சூரியாவும் அவரை ஏற்க வில்லை. மெஜாரிட்டியை நிரூபிக்க பாராளுமன்றத்தை கூட்டும்படி வலியுறுத்தினார். முதலில் பாராளுமன்றம் கூடும் தேதியை சிறிசேனா அறிவித்தார்.

ஆனால் ராஜபக்சேவுக்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்பட்டதை அறிந்து பாராளுமன்றத்தை திடீரென கலைத்தார். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விழித்தது. ராஜபக்சேவை பிரதமராக அறிவித்ததற்கும் தடை விதிக்கப்பட்டது.

அதையடுத்து பாராளு மன்றம் கூடியது அங்கு ராஜபக்சே மீது 3 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெற்றி பெற்றது. இருந்தும் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அதிபர் சிறிசேனா மறுத்து வருகிறார்.

எனவே, பிரதமர் அலுவலகம் அரசு பணத்தை செலவு செய்ய தடை விதித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய பிரச்சினைகளால் இலங்கை அரசியலில் குழப்பம் நிலவுகிறது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ரனில் விக்ரமசிங்கே தொடர்ந்து நான் தான் பிரதமர் என கூறி வருகிறார். அதிபர் சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட ராஜபக்சே பிரதமர் பணியை ஆற்றி வருகிறார். இவர்களில் யார் உண்மையான பிரதமர் என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் வருகிற 5-ம் தேதி இலங்கை பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது. அப்போது ராஜபக்சேவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பினருக்கு பிரதமர் பதவியை வழங்க அதிபர் சிறிசேனா முடிவு செய்துள்ளார். இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

இலங்கை நாடாளுமன்றம் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்... இலங்கை நாடாளுமன்றம் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது! இலங்கை நாடாளுமன்றம் நேற்று (19/11/2018) பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. அமைதியாக நடந்த சபை அமர்...
ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ... ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி! இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ள...
இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் ம... இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மிளகாய்ப் பொடி தாக்குதல், சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு! மகிந்த ராஜபக்ச தரப்பினர் தங்கள் மீது மிளக...
சபாநாயகர் மீது ரணில் – ராஜபக்சே எம்.பி-க்கள்... சபாநாயகர் மீது ரணில் - ராஜபக்சே எம்.பி-க்கள் தாக்குதல்! - போர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்! இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நம்...
Tags: