யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் நடந்த பிரபாகரன் பிறந்தநாள் விழா!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் நடந்த பிரபாகரன் பிறந்தநாள் விழா!

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 65-வது பிறந்த தினம் நேற்று நள்ளிரவு கொண்டாடப்பட்டது.

இலங்கையில், இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்ட நிலையில், அவர்களது உரிமையைக் காக்க தனி நாடு கோரி, ‘புதிய தமிழ்ப்புலிகள்’ என்ற பெயரில் இயக்கம் நடத்திவந்தவர் பிரபாகரன். அந்த அமைப்பை ராணுவ அமைப்பாக மாற்ற முடிவு செய்து, 1976-ம் ஆண்டு மே 5-ல் ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’ அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பின் தலைவர் மற்றும் ராணுவத் தளபதி பொறுப்புகளையும் ஏற்றிருந்தார் பிரபாகரன். உலகில் உள்ள ராணுவப் பிரிவுகள் கடைபிடித்துவரும் கட்டுப்பாடுகளை விட கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து வந்த இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.

வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பமாகத் திகழ்ந்தது திருமேனியார் குடும்பம். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மூதாதையர்கள், வல்வெட்டித்துறையில் முக்கியக் கோயில்களைக் கட்டியிருந்தார்கள். இதேபோல், பருத்தித் துறையில் மெத்தைவீட்டு நாகலிங்கம் என்பவரது குடும்பமும் பிரபலமானது. இந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை – வல்லிபுரம் பார்வதி தம்பதியினரின் கடைசி மகன் பிரபாகரன். 1954-ம் ஆண்டு நவம்பர் 26-ல் பிறந்த பிரபாகரன், 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக் கட்டப்போரில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் பிரபாகரனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜபகக்‌ஷே பதவி இழந்த நிலையில், இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளிலும் பிரபாகரனின் பிறந்த தினம் வெளிப்படையாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இந்நிலையில், இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷேவின் சகோதரர், கோத்தபய ராஜபக்‌ஷே வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்‌ஷே இலங்கையின் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

இதைத் தொடர்ந்து, இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கைக் காக்க ஆயுதப்படைகளை அழைக்கவும், பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அமைதியை நிலை நாட்டும் பணிகளில் அப்படையினரைப் பயன்படுத்தவும் ஏதுவாக, சிறப்பு அரசாணையைப் பிறப்பித்துள்ளார், கோத்தபய ராஜபக்‌ஷே.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் 65-வது பிறந்த தினம் நேற்று நள்ளிரவு கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பிரத்தியேக இடத்தில் பிரபாகரனின் உருவப்படம் வைக்கப்பட்டு, அதன் முன் பிரபாகரனின் வயதைக் குறிக்கும் வகையில் 65 என்ற எண் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டிய மாணவர்கள், பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: