“நாங்கள் இலங்கையர்கள் அதில் எந்தப் பிரச்சணையும் இல்லை” – அண்மையில் வெளிநாடு சென்று வந்த வட மாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் வாக்குமூலம்!

jaganathanஎமது பிரச்சனைகள் பல நாட்டில் ஏற்படவுள்ள அரசியல் யாப்பின் மூலம் பல சாதகம் ஏற்படும் என வட மாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார்.

மத்திய கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் நேற்றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற போது, வட மாகாண முதலமைச்சரின் பிரதிநிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

நாங்கள் இலங்கையர்கள் என்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அண்மையில் நான் சென்ற வெளிநாட்டிலும் இதையே தெரிவித்தேன்.

எமது பிரச்சனைகள் பல இந்த நாட்டில் ஏற்படவுள்ள அரசியல் யாப்பின் மூலம் பல சாதகம் ஏற்படும். ஏனெனில் அரசியல் யாப்பின் திருத்தத்தினில் எமக்கு சாதகமான பல விடயங்கள் உள்ளது.

இலங்கையின் வருமானத்தில் மீனவரின் வருமானமும் முக்கியமானது. வடக்கில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக நாம் நவீன வளர்ச்சிகள் எவற்றினையும் பெறவில்லை.

இவற்றினை எமது மீனவர்களிற்கும் பெற்றுக் கொடுக்க பாடுபடுங்கள். வடக்கில் 83க்கு முன்பு தென்னிலங்கை மீனவர்கள் இங்கு வந்து தொழில் புரிந்தமை கண் கூடு.

ஆனால் அவர்கள் இங்கு நிரந்தரமாக தங்கவில்லை. அதற்காக தற்போது நிரந்தரம் அவர்களுக்கு வழங்க இயலாது. இவ்வாறு வந்து தொழில் புரிபவர்களே அதிகம். அவர்கள் தடை செய்யப்பட்ட முறையையும் பின்பற்றுகின்றனர். தென்பகுதி மீனவர்களிற்கு, கடற்படையும், இராணுவமும் ஊக்கமளிக்கின்றது.

இவ்வாறு ஒரு புறம் ஊக்கமளிக்கும் இராணுவம் மறுபுறம் தமிழ் மீனவர்கள் உள்ள பிரதேசங்களில் உள்ள குளங்கள், கடல்களிற்கு அருகிலேயே முகாம்களை அமைத்துள்ளது. உதாரணமாக வட்டுவாகலைக் குறிப்பிடலாம்.

போரால் பாதிக்கப்பட்ட எமது மீனவர்களிற்கும் 30 அடி படகுகள் வழங்கப்படவேண்டும்.

இதேவேளை வடபகுதி மீனவர்களின் மேம்பாடு கருதினை கொண்டு மீன் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றும், கோழித்தீன் உற்பத்தி தொழிற்சாலைகளும் உருவாக்க முன்வர வேண்டும், என்றார்.

  • தயாளன், ஈழம்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: