இலங்கையில் ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரி கைது!

இலங்கையில் ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரி கைது!

இலங்கையில் ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரி கைது!

இலங்கையில், சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி, காணாமல் போகச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ராணுவ கர்ணல் ஒருவரை விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போனது குறித்து வாக்குமூலம் பெற ராணுவ கர்ணல், குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் குறித்த ராணுவ லெஃப்டினன் கர்ணலை கைது செய்ததாக காவல் துறையினர் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அரன்த பீரிஸ் என்ற ராணுவப் புலனாய்வுப் பிரிவின் லெஃப்டினன் கர்ணல் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பிரகீத் எக்னெலிகொட ஊடகவியலாளராகவும், கேலிச்சித்திர ஓவியராகவும் பிரபல்யமானவர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

2010-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி இரவு 8 மணியளவில் கொழும்பு, கொஸ்வத்தை என்ற இடத்தில் இவர் காணாமல் போனதாக காவல் துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே இந்த சம்பவம் நடந்தது.

பிரகீத் எக்னெலிகொடவை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினரே கடத்தியதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச தரப்பினர் மறுத்து வருகின்றனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன நாள் முதல் இன்று வரை பன்னாட்டு நிறுவனங்கள், சுயாதீன அமைப்புக்கள் அவர் குறித்து கரிசனை வெளிப்படுத்தி வருகின்றன.

பிரகீத் காணாமல் போன சம்பவம் குறித்து 2016-ஆம் ஆண்டு காலப் பகுதியில், ராணுவப் புலனாய்வு அதிகாரிகளான லெப்டினன் கேர்ணல் ஷம்மி கருணாரத்ன, சார்ஜன் மேஜர் பிரியந்த ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களை கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றம் விடுவித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

இந்தச் சம்பவம் குறித்து இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: