ஊடகவியலாளர் KG.மகாதேவா காலமானார்!

ஊடகவியலாளர் KG.மகாதேவா காலமானார்!

ஊடகவியலாளர் KG.மகாதேவா காலமானார்!

மூத்த பத்திரிகையாளரும், ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியருமான கே.ஜி.மகாதேவா சென்னையிலுள்ள தனியார் மருத்துமனை ஒன்றில் தனது 76 வ்து வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.

சுகவீனமுற்ற நிலையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், இரண்டு மாத காலமாக சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

கண்டியிலிருந்து வெளிவந்த ‘செய்தி’ பத்திரிகையிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகையிலும் பணியாற்றிய கே.ஜி.மகாதேவா, போர் நெருக்கடி மிகுந்த காலப் பகுதியில் ஈழநாடு பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியவர்.

– தினக்கதிர்

Tags: 
%d bloggers like this: