இலங்கையில் வாழ்வதற்கு, இந்தியாவிலேயே நிம்மதி கிடைக்கிறது – ஈழ ஏதிலி!

இலங்கையில் வாழ்வதற்கு, இந்தியாவிலேயே நிம்மதி கிடைக்கிறது - ஈழ ஏதிலி!

இலங்கையில் வாழ்வதற்கு, இந்தியாவிலேயே நிம்மதி கிடைக்கிறது – ஈழ ஏதிலி!

இலங்கை மன்னாரில் இருந்து 22 வயதில் இந்தியாவுக்கு ஏதிலியாக சென்று பல இன்னல்களால், இன்னும் திருமணம் கூட செய்ய முடியாத நிலையில் வாழ்வுக்காகவே தமிழக உறவுகளுடன் வந்து இருந்த வேளையிலேயே இலங்கை கடற்படையிடம் அகப்பட்டதாக இந்தியப் படகில் அகப்பட்ட மீனவன் தெரிவித்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இது குறித்து அன்மையில் இலங்கை காவல்துறையிடம் பிடிபட்டபோது, ஜீவா தெரிவிக்கையில், மன்னாரில் குடும்ப உறவுகளுடன் வாழ்ந்த காலப்பகுதியில் எனது இரத்த உறவுகளில் 4 பேரை இழந்து செய்வதறியாது தவித்தபோது, தாய்த் தமிழகத்தை நோக்கி படகில் தப்பிச் சென்றேன். அவ்வாறு சென்று, ஆரம்பத்தில் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் தவித்து வந்தேன். பின்னர் சிறிது சிறிதாக இயல்பிற்குத் திரும்பி தொழில் தேட பிழைத்து வாழ்க்கையை நகர்த்தினேன்.

இவ்வாறு நான் சிறிதளவேனும் இயல்பிற்குத் திரும்ப எனக்கு தமிழக உறவுகளே கை கொடுத்தனர். அதனை நான் எவ்வாறு மறப்பேன். நான் ஏதிலியாக சென்று வாழ்ந்த இளமைக் காலமாக இருந்தது. இதனால் அங்கு ஆரம்பத்தில் இருந்த சட்ட நெருக்குதல் காரணமாக நான் திருமணமும் செய்யாது தனித்தே வாழ்ந்து வந்தேன்.

ஈழத்தில் பட்ட அவலமும் வேதனையும் இன்றைய வரையிலும் மறக்க முடியவில்லை. இப்பொழுது, ஈழத்தில் கால் பதித்த வேளையில் அந்த நினைவுகள் வந்தன. யுத்தத்தின்போது இறந்த எனது உடன்பிறப்புக்கள் 4 பேரையும், இப்பொழுது எண்ணிப் பார்க்கின்றேன். இருப்பினும் விரைவில் தமிழகம் திரும்பவே விரும்புகின்றேன். ஏனெனில் இந்த மண்ணில் இருந்தால் எனக்கு பழை நினைவுகளே வந்து போகும். இதில் இருந்து மீண்டு, ஓர் நிம்மதியான வாழ்வை எனக்கு தந்தது, இந்தியாதான். அதனால் நான் தற்போதும் இந்தியா போகவே விரும்புகின்றேன், என்றார் ஜீவா.

– ஈழத்திலிருந்து தயாலனோடு….

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: