பொய்யான வழக்கின் அடிப்படையில், விடுதலைப்புலி மேனாள் போராளிக்கு ஆயுள் தண்டனை வழக்கியுள்ளது, சிங்கள நீதிமன்றம்!

பொய்யான வழக்கின் அடிப்படையில், விடுதலைப்புலி மேனாள் போராளிக்கு ஆயுள் தண்டனை வழக்கியுள்ளது, சிங்கள நீதிமன்றம்!

பொய்யான வழக்கின் அடிப்படையில், விடுதலைப்புலி மேனாள் போராளிக்கு ஆயுள் தண்டனை வழக்கியுள்ளது, சிங்கள நீதிமன்றம்!

விடுதலைப்புலிகள் அமைப்பின் காலத்தில், கட்டாய ஆட்சேர்ப்பின் போது வலிந்து பிடித்துச் சென்று இறப்பிற்கு காரணமாக இருந்தார் என்ற வழக்கில் தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக விடுதலைப் புலிகள் நிர்வாகத்தில் இருந்தவரும் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தின் விரிவுரையாளராகவும் இருக்கும் கண்ணதாசனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் (25-07-2017) வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


வன்னியின் இறுதி யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இயங்கிய வேளையில் புலிகள் அமைப்பிற்கு கட்டாயத்தின் பெயரில் தனது மகளை பிடித்துச் சென்று புலிகள் அமைப்பில் இணைத்ததாக கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த தாயார் ஒருவர் செய்த புகாரின் அடிப்படையிலேயே மேற்படி வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்றில் தொடர்ச்சியாக நடந்த வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் இதன் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதன்போது விரிவுரையாளரான கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் காலத்தில் பெண்களை பெண்புலிகளும், ஆண்களை ஆண்புலிகளும் இணைத்தனரே அன்றி ஆண்கள் நேரடியாக பெண்களை இணைக்கும் செயல்பாட்டினை இறுதி வரை மேற்கொள்ளாத நிலையில் இந்த குற்றச் சாட்டினை சந்தேக நபர் மீது சுமத்த முடியாது என்பதோடு, புலிகள் அமைப்பில் இருந்தமைக்காக அரசினால் இரண்டு ஆண்டு காலம், அரசின் சம்மதத்துடனேயே புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் இவ்வாறு வழக்குத் தொடர்ந்ததை ஏற்புடையதாகாது என குறித்த சந்தேக நபரின் சார்பில் முன்னிலையான வழக்குரைஞர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இதன்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகசுந்தரம் என்ற கண்ணதாசன் என்பவருக்கே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பினை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த சந்தேக நபர் முன்னாள் போராளி என்பதன் அடிப்படையில் 2 ஆண்டுகள் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்ட பின்பும் இந்த வழக்கு எவ்வாறு தாக்கல் செய்யப்படுகின்றது என அரச சட்டவாதியிடம் கோரினார். அத்துடன் இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஒருவருக்கு இரண்டாம் முறையாக தண்டனை வழங்குவதனையிட்டு மனம் வருத்துகின்றேன். எனவும் நீதிபதி பாலேந்திரன் தனது தீர்ப்பின்போது குறிப்பிட்டார்.

இந்த தீர்ப்பானது, ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் மீதும் விடுக்கப்படும் மிரட்டலாக பார்க்க வேண்டியுள்ளதது. தமிழ் அரசியல், சமூக செயற்ப்பாட்ட்டாளர்களை முடக்கி தமிழ் அரசியலை அடக்குவதே இதன் மறைக்கபட்ட நிகழ்ச்சி நிரல் என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: